விஜயலட்சுமி தந்த டாக்குமெண்ட்சை காட்டி போலீசையும் செக்கிங் ஆபிசரையும் ரவி பிடித்தான், ரவி கொடுத்த டாக்குமெண்ட்சை படித்த செக்கிங் ஆபிசர் கோபத்துடன்
”இது அநியாயம், மோசடி இப்பவே அந்த பேக்டரியை சீல் வைக்கனும்” என கொந்தளித்த செக்கிங் ஆபிசரை அமைதியாக்கினான் ரவி
”இருங்க சார் பொறுங்க, இப்ப போனா ஒண்ணுமே இருக்காது சரியான நேரம் பார்த்து போனா கையும் களவுமா பிடிக்கலாமே அப்பதான் வழக்கு கோர்ட்டு வரைக்கும் போகும் நாம நினைச்சது நடக்கும்”
”ஆமாம் சார் ரவி சொன்னதும் சரிதான், என்ன இருந்தாலும் சிவசங்கரன் இந்த ஊருல பெரிய புள்ளி அந்தாளை எதிர்க்கறது கொஞ்சம் கஷ்டம்தான் சட்டுன்னு ஆதாரங்களையும் சம்மந்தப்பட்ட ஆளுங்களையும் மாயமாக்கிடுவான்” என போலீஸ் சொல்ல அமைதியானார் செக்கிங் ஆபிசர்
“புரியுது இத்தனை நாளா இது எனக்குத் தெரியாம போச்சே”
”போன முறை செக்கிங் போனப்ப நீங்க கண்டுபிடிக்கலையா சார்” என ரவி கேட்க
”இல்லையே அந்தாளு பக்காவா செட் பண்ணியிருந்தான் போல, என்னால எதையுமே கண்டுபிடிக்க முடியல பரவாயில்லை இன்னிக்கு பார்த்துக்கலாம் சரி நாம எப்ப போறோம்”
“நைட் 10 மணிக்கு மேலதான் அங்க வேலையே நடக்கும் அப்ப போனா சரியாயிருக்கும் முன்னாடி போனா நமக்குதான் கஷ்டம்”
“சரி சரி அப்ப நான் ரெடியாயிருக்கேன் போறப்ப வந்து கூட்டிட்டு போங்க” என சொல்லவும் ரவியும் தலையாட்டிவிட்டு தன் நண்பனுடன் வெளியே வந்தான்
”ரவி தாங்ஸ்டா”
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.