This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“இங்கே பாரு அஹல்யா, என்னை பொறுத்த வரைக்கும் நம்ம மனசாட்சிக்கு எது சரின்னு படுதோ அது தான் சரி. எனக்கு உன்னை பிடிச்சிருக்கு கல்யாணம் செய்துக்கனும். உனக்கு பிடிக்கலைனா நேரா சொல்லிடு. நான் உன்னை விட்டு தூரமா போயிடுவேன்,” என்றான் அபினவ்!
அஹல்யா அவன் பக்கம் திரும்பி பார்த்தாள்.
பிடிக்கவில்லை என்று ஒரு வாரத்தை சொல்லி விட்டால் போய் விடுவான் தான். அவளுடைய மறந்துப் போன வாழ்க்கையை பற்றி சொல்லலாமா வேண்டாமா என்றெல்லாம் யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் அபினவை பிடிக்கவில்லை என்று சொல்ல அஹல்யாவிற்கு மனம் வரவில்லை.
“நான் சொல்றதை கேட்டப் பிறகு உங்க மனசு மாறிடும்,” என்று மட்டும் சொன்னாள்!
“அஹல்யா! என் பொறுமையை சோதிக்குற. ஒன்னு நீ சொல்லனும்னு நினைக்குறதை சொல்லு. இல்லை கல்யாணம் பத்தின என் கேள்விக்கு பதில் சொல்லு.”
“வாழ்க்கைல எல்லாமே அவ்வளவு ஈசியா இருந்தா நல்லா இருக்குமே அபினவ்.”
“நாம ஈசியா எடுத்துக்கிட்டா எல்லாமே ஈசி தான். இங்கே பாரு, இந்த ஹிஸ்டரி எல்லாம் வேண்டாம். நாம ரெஜிஸ்டர் கல்யாணம் செய்துக்கலாம். இன்ஸ்பெக்டர் தேன் சாரையும், சத்யா அக்காவையும் கூப்பிட்டா நமக்காக வந்து சைன் போடுவாங்க. சரியா?”
அபினவ் சொன்னதற்கு பதில் சொல்லாமல் மீண்டும் எங்கேயோ பார்த்துக் கொண்டு பேசினாள் அஹல்யா.
“என் அம்மா, அப்பாக்கு பூர்வீகம் தமிழ்நாடா இருந்தாலும், நான் பிறந்தது வளர்ந்தது மும்பைல. எனக்கு ஒரு அக்கா, அப்பா இல்லை, அம்மா மட்டும் தான். கடைக்குட்டின்னு வீட்டுல ரொம்ப செல்லம். அக்கா, அம்மா இரண்டு பேருமே நான் சொல்றதை அப்படியே கேட்பாங்க. அவங்க அப்படி கேட்காம இருந்தது ஒரே ஒரு விஷயத்துல மட்டும் தான். காலேஜ்
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.