(Reading time: 34 - 67 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

நீங்களே இங்க படுக்கறப்ப எனக்கென்ன கேடு, நானும் உங்களோடவே இங்க படுத்துக்கறேன்”

  

”அய்யோ வேணாம் மாமா அப்புறம் உங்க பொண்ணு வந்து பார்த்தா பேயாட்டம் ஆடுவா தயவு செஞ்சி நீங்க உங்க ரூம்ல படுங்க போங்க“

  

”அட இருக்கட்டும் மாப்பிள்ளை அப்படியே அவள் வந்து கேட்டாலும் நான் பதில் சொல்லிக்கிறேன்”

  

“என்னவோ செய்ங்க” என அலுத்துக் கொண்டே படுத்து கண்கள் மூடினான். மற்றவர்களும் படுத்து உறங்கலானார்கள்.

  

மறுநாள் பொழுது விடிந்தது.

  

உறக்கம் கலைந்து முதலில் கண்கள் திறந்துப் பார்த்தான் கொம்பன்

  

”ஈசனே இன்னிக்கு பொழுது நல்லபடியா விடியனும்பா” என வேண்டிக்கொள்ள காபி என்ற காவேரியின் குரல் கேட்க சரியாக இருந்தது

  

”எழுந்துட்டாளா சந்தோஷம்” என புலம்பிக் கொண்டே காபி போட்டுக் கொண்டு அவளது அறை வாயிலில் நின்றான்

  

”காபி” என மீண்டும் அழைத்தாள் அதைக்கேட்டவன்

  

”கதவை திறந்தாதானே உள்ள வரமுடியும்” என்றான் சத்தமாக அதைக்கேட்டு சில நொடிகள் கழித்து கதவு திறக்கப்பட்டது

  

காவேரியைக்கண்டதும் விக்கித்துப் போனான் கொம்பன். அவள் அணிந்திருந்த உடை இறுக்கமாக கவர்ச்சியாக இருந்தது, அவன் அவளையே வெறித்து வெறித்துப் பார்க்க அவளோ காபியை வாங்கி பருகலானாள்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.