”இரு என்ன அவசரம், நான் செய்ய வேண்டிய வேலை ஒண்ணு பாக்கியிருக்கு அதை முடிச்சிட்டுப் போறேனே” என சொல்ல அவளோ வேண்டாத கற்பனையை ஒரு நொடியில் கண்டு அச்சம் கொண்டு
”அதெல்லாம் வேணாம் நீ கிளம்பு” என விரட்ட கணக்குப்பிள்ளையோ
”கொம்பா என்ன வேலைப்பா அது சொல்லு சேர்ந்து செய்யலாம்”
“தப்பு தப்பு தப்பு அதை நான் மட்டும்தான் செய்யனும் நீயெல்லாம் வரக்கூடாது”
”அப்படி என்ன வேலைப்பா”
”சொன்னா உனக்குப் புரியாது நீ மாமாவை கூட்டிட்டு கிளம்பு நான் வந்துடறேன்”
”சரி கொம்பா நாங்க கிளம்பறோம்” என சொல்லியவன் சண்முகத்தை அழைத்துக் கொண்டு செல்ல காவேரியோ பதட்டமானாள்
”இதப்பாரு கொம்பா என்னை பத்தி உனக்குத் தெரியாது நான் சொன்னதை செய்றவ என்கிட்ட ஆசிட் பாட்டில் இருக்கு வீணா உன் முகத்தை ரணமாக்கிக்காத” என சொல்ல அவனோ மென்மையாக சிரித்தபடியே அவளை நெருங்கி
”நைட்டியில சும்மா அள்ளுற” என சொல்ல அவளுக்கு சுருக்கென்றது
”பாவி இப்படியா ஒரு பொண்ணை பார்த்து வைப்ப”
”நீ யாரு என் முறைபொண்ணுதானே“
”ஓஹோ அந்த நினைப்பில இருக்கியா, இவ்ளோ அவமானம் நடந்தும் எப்படி உன்னால இப்படி வெட்கமில்லாம பேச முடியுது”