”அதையும் பார்க்கலாம் வா” என அழைக்க அவனும் சரியென அவளை அழைத்துக் கொண்டு நடந்தே சென்றான்.
இருவரும் ஒன்றாக வருவதைக்கண்டு ஊர்க்காரர்கள் பார்த்து மகிழ்ந்தார்கள், கொம்பன் சொன்னது போலவே அவனுக்கு மதிப்பு மரியாதை இருந்தது, அவனைக் கண்டவர்கள் பெரியவர்கள் நலம் விசாரித்தார்கள் சின்னவர்கள் கைகூப்பி வணக்கம் வைத்தார்கள், இன்னும் சிலரோ காவேரியிடம் வந்து அவனைப் பற்றி புகழ் பாடினார்கள், அதைக்கேட்டு அவளுக்கு பெருமையாக இருந்தது தன் கணவரை பற்றி நான்கு பேர் பாராட்ட அவள் உள்ளம் குளிர்ந்தாள், அவளின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியை வைத்து கர்வம் கொண்டான் கொம்பன், அது சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை.
”எப்படியோப்பா கொம்பா உன்னை இந்த ஊர்லயே பிடிச்சி வைக்க உன் முறைபொண்ணுக்கு நடக்க இருந்த 7 கல்யாணத்தை நிப்பாட்ட நாங்க பட்ட பாடு இருக்கே அப்பப்பா இப்பபாரு நீயும் உன் பொண்டாட்டியும் ஒண்ணா சந்தோஷமா வர்றத பார்க்கறப்ப எவ்ளோ சந்தோஷமா இருக்கு, இப்படியே இருப்பா இந்த சந்நியாசி ஆகறதை விட்டுட்டு அடுத்த வருஷமே ஒரு புள்ளையை பெத்துடு, உன்னால பயனடைஞ்சவங்க அதிகம் இன்னும் உன்னிடம் உதவி கேட்க ஆளுங்க காத்திருக்காங்க, குடும்பத்தையே பார்த்துட்டு ஊரை மறந்துடாதப்பா, அப்ப அப்ப ஊர்க்காரங்களோட தேவைகளையும் பூர்த்தி செய்
என்னிக்குமே எங்களோட ஆசிர்வாதம் உனக்கு துணையா இருக்கும், நீ ஓஹோன்னு வருவப்பா, என்னம்மா காவேரி உங்கப்பா முதல்லயே கொம்பனை பிடிச்சி உனக்கு கட்டி வைச்சிருந்தா உனக்கு அவமானம் வந்திருக்காதுல்ல, உங்கப்பா உனக்கு எத்தனை முறை கல்யாணம் செய்ய பார்த்தாரு, கடைசியில பார்த்தியா அந்த கடவுளுக்கே பொறுக்கலை, கொம்பனுக்காக எங்களை தூது அனுப்பி உன் கல்யாணத்தை நிப்பாட்டி இப்ப பாரு உன்னையும் கொம்பனையும் சேர்த்து வைச்சிட்டோம், எது எப்படியோ கொம்பனோட சந்தோஷமா வாழற வழியைப் பாரும்மா
இப்பவே கொம்பனை வீட்டோட மாப்பிள்ளையா வைச்சிருக்கியாமே இது நல்லாவாயிருக்கு, நீதானே புகுந்த வீட்டுல போய் இருக்கனும், என்னதான் கொம்பனுக்கு உன் மேல விருப்பம் இருந்தாலும் இப்படியா அவனை ஆட்டிவைப்ப, பாவம்மா ஊருக்கே