”எப்படி நினைக்காம இருக்க முடியும், நீ ஊர்க்கு நல்லது செய் செய்யாத, இதுல நான் எங்கிருந்து வரேன், ஏன் எங்கப்பா கூடதான் பல பேருக்கு நல்லது செய்திருக்காரு, அவரு என்ன உன்னைப் போல டாம்டாம் அடிக்கிறாரா என்ன“
”அய்யோ அப்படியில்லை அவங்களா எதையாவது பேசினா அதுக்கு நான் எப்படி பொறுப்பாவேன்”
”ஏன் சொல்லமாட்ட நீ சரியான தற்பெருமை பிடிச்சவன், எனக்கென்னவோ நான் உன்கூட வர்றதை பத்தி தகவல் அனுப்பி வைச்சிட்ட போல, அதான் வர்றவங்க எல்லாம் உன்னை தூக்கி வைச்சி பேசறாங்க என்னை குறை சொல்லி பேசறாங்க இது எல்லாம் சரியில்லை கொம்பா”
”சரி சரி இப்ப என்னை என்னதான் செய்யச் சொல்ற சொல்லு செய்றேன், எல்லாரையும் கூப்பிட்டு மாத்தி பேச சொல்லவா, என்னை கெட்டவனா ஆக்கிக்கவா, எதுவாயிருந்தாலும் சொல்லு செய்றேன், இப்படி கோபமா கத்தாத என் மானம் போகுது”
”ஓஹோ உனக்கு மட்டும்தான் மானம் இருக்கா எனக்கில்லையா”
”தப்புதான் உனக்கும் இருக்கு போதுமா, இப்ப நான் என்ன செய்தா உன் கோபம் தணியும் சொல்லு செய்றேன்” என சொல்ல அவளோ அவனை ஏற இறங்கப் பார்த்து அக்கம் பக்கம் பார்த்துவிட்டு அவனிடம்
”கைகட்டி வாய்பொத்தி என்கூட நடந்து வா” என சொல்ல அவனோ குழம்பி
”என்ன சொன்ன சரியா என் காதுல விழலை”
”கை ரெண்டையும் இப்படி கட்டிக்கிட்டு வாயில கையை வைச்சி பொத்திக்கிட்டு என் கூட பவ்யமா நடந்து வான்னு சொன்னேன்” என அவள் சைகையில் செய்து வேறு காட்ட அவனோ அதிர்ந்தான்