”என்ன காரியம் செய்து வைச்ச நீ”
”ஏம்பா கோபப்படறீங்க, எத்தனை முறை என் கல்யாணம் நடக்காம நின்னப்ப நான் எவ்ளோ அவமானப்பட்டிருப்பேன், என்னை ஊர்காரங்க எவ்ளோ கேலி பேசினாங்க மறந்துட்டீங்களா, அந்த வலியை கொம்பன் அனுபவிச்சாதானே என்னோட வேதனை அவருக்குப் புரியும் அதான் இப்படி செய்தேன் நான் செஞ்சது தப்பில்லைப்பா” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட நொந்துப் போனார் சண்முகம்.
கணக்குப்பிள்ளையோ தேடிபிடித்து கொம்பனின் முன் நின்று ஏதும் பேசாமல் கண்கள் கலங்கினான், அவனது கலக்கத்தைக்கண்ட கொம்பனும் கண்கள் கலங்கி அவனை அணைத்துக் கொண்டான், இருவரிடமும் பேச்சில்லை மாறாக பேசிக் கொள்ளாமலே இருவரும் ஆறுதல் அடைந்தார்கள்.
அன்றைய பொழுது அனைவருமே ஒருவித கலக்கத்துடனே இருந்தார்கள் என்னவோ இரவு உணவு உண்டு முடித்து அவரவர்கள் தங்கள் அறைக்குள் முடங்க கொம்பன் மட்டும் காவேரியை தேடிச் சென்றான், அவளோ உறங்குவதற்காக கண்களை மூடியிருந்தாள் இன்னும் உறங்கவில்லை, அவளை அப்படி கண்டதும் உறங்கிவிட்டாள் என நினைத்த கொம்பனோ
”ஏய் முறைபொண்ணே உன்னைத்தான் எழு, நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும் எழு” என சத்தமாகச் சொல்ல அது அவளுக்கும் கேட்டது, அவனது குரலில் கோபமிருப்பதைக்கண்டு பயந்தவள் இப்போது எழுந்தால் வீணாக பிரச்சனை வரும் என நினைத்து உறங்குவது போல பாசாங்கு செய்தாள்.
அதைகூட கவனியாமல் அவன் அவளது தோளை போட்டு உலுக்கினான்
”எழு உன்கிட்ட பேசனும் எழு எழு” என உலுக்கோ உலுக்கென உலுக்கியும் அவள் எழாமல் போகவே அவனுக்கே சந்தேகம் வந்தது