இதுபற்றி பேசி ஆறுதல் அடைய சென்றார்.
காவேரியின் வீடுவரும் வரை கொம்பனுக்கு இதே நிலைமைதான், எந்த ஊர் அவனை தூக்கி வைத்து பேசியதோ இப்போது அந்த ஊரே அவனைக்கண்டு பரிதாபப்பட்டது. வீடு வந்ததும் முதல் ஆளாக உள்ளே ஓடினான் கொம்பன் மெதுவாக நடந்து உள்ளே சென்றாள் காவேரி.
”வாடி வா என் முறைபொண்ணே வா இப்ப உனக்கு சந்தோஷமா”
”ஓ ரொம்பவே”
”என் அப்பா என்னை அந்த நிலைமையில பார்த்து எவ்ளோ வருத்தப்பட்டாரு தெரியுமா மனுஷியாடி நீ, இப்படியா என்னை ஆட்டி படைப்ப“
”என்னவோ ஒரு முறை இப்படி ஆனதுக்கு இவ்ளோ வருத்தப்படறியே 7 முறை என் கல்யாணம் நின்னப்ப கூனிகுறுகி நானும் என் அப்பாவும் நின்னோமே, எங்களைப் பார்த்து இதே ஊர்க்காரங்க சிரிச்சாங்களே, மணப்பெண் அலங்காரத்தில கல்யாணம் நின்ன துக்கத்தில கண்ணீரும் கம்பலையுமா நின்ன என்னைப் பார்த்து என் அப்பா எவ்ளோ வருத்தப்பட்டிருப்பாரு, அதையெல்லாம் நீ யோசிச்சியா
ஒரு முறை உனக்கு இப்படி ஆனதுக்கே துடிச்சிப் போறியே, 7 முறை எனக்கு அவமானம் நடந்தது, நான் எவ்ளோ துடிச்சிப் போயிருப்பேன், அதை நினைச்சிப் பார்த்தியா நீ” என பேச கொம்பனால் பேச இயலவில்லை, அவள் பக்கம் நியாயம் இருந்தது இவன் பக்கம் பதில் கூட இல்லை.
தலையை தொங்க போட்டுக் கொண்டு உள் அறைக்குச் சென்று முடங்கினான். அவன் சென்றதும் சண்முகமும் கணக்குப்பிள்ளையும் பதறி அடித்துக் கொண்டு வீட்டிற்குள் வந்தார்கள்
”மாப்பிள்ளை மாப்பிள்ளை” என சண்முகம் அழைத்தபடி வந்தவர் காவேரியைக்கண்டதும் கோபம் கொண்டார்