மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 29 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“ப்ச்... சக்தி சென்னைல இருந்து வந்திருக்காங்க. அங்கே செய்றது வேற. இது சின்ன கிராமம். இங்கே வேற...” என்றான் தேன் அலுப்புடன்!
சத்யா அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை, “எங்கேயா இருந்தாலும் ரூல்ஸ் ஒன்னு தானாமே,’ என்றாள்.
“சத்யா!!” தென்றல்வாணன் பேச்சில் கோபத்தின் சாயல் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. அதைப் புரிந்துக் கொண்டவளாக,
“அதை நான் சொல்லலைங்க, சக்தி சொன்னாங்க... அதான் இப்படி வேறென்ன எல்லாம் அவங்க சொல்றாங்கன்னு தெரிஞ்சு உங்களுக்கு சொல்றதுக்காக தான் அவங்க கூடவே வந்தேன்...” என்றாள் அமைதியாக!
தென்றல்வாணன் யோசித்தான்...! சத்யாவின் முகத்தில் ரகசிய புன்னகை ஒன்று வந்துப் போனது!
“என்னங்க... நான் ஒன்னு சொல்லட்டுமா...???”
“என்ன?”
“இப்படி கஞ்சி போட்ட புடவை மாதிரி விரைப்பா போலீஸா நீங்க பேசுறது செம சூப்பரா இருக்கு! சிங்கம் சூர்யா கூட உங்களுக்கு அப்புறம் தான்... வழக்கமான உங்க கோபத்தை விட இது உங்களுக்கு நல்லா செட் ஆகுது...” ஏற்கனவே மெதுவாக பேசிக் கொண்டிருந்த சத்யா, இப்போது குரலை இன்னும் குறைத்து, கணவன் என்பதால் பேச்சில் காதலையும் குழைத்துச் சொன்னாள்...!
ஒரே ஒரு வினாடி தென்றல்வாணனின் முகத்தில் மென்மை வந்துப் போனது!
உடனேயே, 'இப்போ என்ன இப்படி ஒரு பேச்சு,' என்ற லுக்கை முகத்தில் கொண்டு வந்தான். இருந்தாலும் பேசியப் போது அவனுடைய பழைய கோபம் குறைந்து தான் போயிருந்தது!