(Reading time: 21 - 42 minutes)
Chinna marumagal
Chinna marumagal

தொடர்கதை - சின்ன மருமகள் - 01 - சசிரேகா

முன்னுரை

  

தோழியின் வாழ்க்கையை சரிசெய்ய வந்த நாயகியே நாயகனின் வசம் தன் மனதை இழக்கிறாள். தோழிக்கு துரோகம் செய்தால் மட்டுமே நாயகி தன் காதலை அடைய முடியும். தன் காதலை வெற்றி பெற வைக்க அவள் நடத்தும் நாடகத்தில் யாருடைய மனம் மாறியது, நாயகன் நாயகியின் காதலை ஏற்றானா அல்லது நாயகியே தன் தோழிக்காக நாயகனை விட்டுக்கொடுத்தாளா என்பதே இக்கதையின் கருவாகும்.

  

பாகம் 1

  

காரைக்குடி

  

காலை 10 மணியளவில் ஜானகி இரயில்வே நிலையத்தில் யாருக்காகவோ வெகு நேரமாக காத்திருந்தாள்.

  

”சே எம்புட்டு நேரம்தான் கால்கடுக்க காத்திருக்கிறது, எப்பவோ வரவேண்டிய ட்ரெயின் இன்னும் வரகாணோம், எங்கிட்டு இருக்குன்னு தெரியலை, எப்ப வந்து நிக்கும்னு தெரியலையே ஷ்ஷ்ஷ் யப்பா கடவுளே நான் புலம்பறது உனக்கு கேட்குதா இல்லையா” என வாய்விட்டே புலம்பும் அளவு நொந்துப் போயிருந்தாள்.

  

அவளின் புலம்பல் வீணாகவில்லை, கடவுளுக்கு அவளின் கஷ்டம் புரிந்துவிட்டது போலும் அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த திருச்சி ரெயில் தண்டவாளத்தில் மெதுவாக வந்துக் கொண்டிருந்தது. ரயிலைக்கண்டதும் ஜானகிக்கு நிம்மதியானது.

  

”அப்பாடா ஒருவழியா வந்துடுச்சி சந்தோஷம்” என சொல்லிக் கொண்டே ரயிலை பார்க்கலானாள். ரயிலும் மெதுவாக வந்து நின்றதும், பயணிகள் ரயிலில் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள். ஜானகியும் அப்படி இப்படி என யாரையோ தேட திடீர் என அவளின் இரு கண்களையும் யாரோ ஒருவரின் கைகள் மூடப்படவே ஜானகி ஒரு நொடி அதிர்ந்தாலும் அடுத்து மெல்ல சிரித்துவிட்டு

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.