(Reading time: 21 - 42 minutes)
Chinna marumagal
Chinna marumagal

”மஹதி” என்றாள் புன்னகையுடன். அடுத்து மஹதி கலகலவென சிரித்தபடியே தன் கைகளை எடுத்துவிட்டு ஜானகி முன் நின்றாள்.

  

”எப்படியிருக்க ஜானு” என மஹதி கேட்க அதற்கு ஜானகியோ நீண்ட பெருமூச்சு விட்டு

  

”ஏதோ இருக்கேன்”

  

”ஜானு என்னப்பா இப்படி டல்லா பேசற ஓஓஓ ரொம்ப நேரம் காத்திருந்தியா”

  

”சே சே அப்படியில்லை உனக்காக காத்திருக்கறது ஒண்ணும் கஷ்டம் இல்லை, நான் வேற எதையோ நினைச்சேன் அதான்” என்றாள் அலுப்பாக

  

”ஏன் இப்படி அலுப்பு சலுப்பா பேசி வைக்கற, போன்ல கூட நீ சரியா பேசலை ,ஏதோ பிரச்சனைன்னு சொன்னியே அது என்ன விசயம்”

  

”என் பிரச்சனையை பேசற இடம் இது இல்லை வா போலாம்”

  

”எங்க உன் வீட்டுக்குதானே, உன் ஹஸ்பெண்ட்டை பார்க்கனும்னு ஆசையா இருக்கு, சாரிடி உன்னோட கல்யாணத்துக்கு என்னால வரமுடியலை, அப்ப எனக்கு பரிட்சை இருந்தது அதான் வெரி சாரி ஜானு”

  

”பரவாயில்லைடி அது ஒரு கல்யாணம், அது நடந்தது எனக்கே பிடிக்கலை, இதுல நீ வராததுதான் குறைச்சலா என்ன”

  

”ஏன் இப்படி விரக்தியா பேசற, உனக்கு கல்யாணம் ஆகி ஜஸ்ட் 6 மாசம்தானே ஆகுது, அதுக்குள்ளயே ஏதோ வாழ்க்கையை வெறுத்தமாதிரி பேசற, என்னாச்சி ஜானு எனிதிங் சீரியஸ்”

  

”அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் நீ வா” என அவளை அழைத்துக் கொண்டு ரயில்வே நிலையத்தை விட்டு வெளியேறி அங்கு காத்திருந்த ஜானகியின் தந்தை காரில் இருவரும்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.