(Reading time: 21 - 42 minutes)
Chinna marumagal
Chinna marumagal

”என்னத்த சுவாரஸ்யமோ, வாழவே பிடிக்கலை மஹதி” என சொல்ல உடனே சீரியஸானாள் மஹதி

  

”ஜானு ஏன் இப்படி பேசற என்னாச்சி, நான் உன் பிரெண்ட்தானே என்கிட்ட சொல்லு எதையும் மறைக்காத”

  

”மறைக்க என்ன இருக்கு எல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்ச பிரச்சனைதான்”

  

“இப்படி மர்மமா பேசி வைக்காத எனக்குப் புரியலை” என சொல்ல வேணி அங்கு வந்தார்

  

”அவள் பிரச்சனை அப்புறம் முதல்ல உனக்கு அவள் செஞ்ச துரோகத்தை பத்திக் கேளு”

  

”துரோகமா யாரு, ஜானு எனக்கு செய்தாளா இதை நான் நம்பனுமா போங்க ஆன்ட்டி காமெடி பண்ணாதீங்க”

  

”உண்மையைதான் சொல்றேன், வேணா கேட்டுப்பாரு வர வர உன் ப்ரெண்ட் சுயநலவாதியாயிட்டா, யார் சந்தோஷமா இருந்தாலும் அவளுக்கு பிடிக்கலை வயிறு எரியறா” என அடுக்கிக் கொண்டே போக மஹதியோ குழம்ப குபேரன் தன் மனைவியை சத்தம் போட்டார்

  

”போதும் நிறுத்து அவங்க பேசிக்கட்டும், நீ வா நாம போலாம்” என அவரை கையோடு அழைத்துக் கொண்டு வெளியே சென்றே விட்டார்.

  

இப்போது ஜானகியின் அறையில் ஜானகியும் மஹதியும் மட்டுமே இருந்தார்கள்.

  

”ஜானு என்னாச்சி ஜானு, உங்கம்மா எவ்ளோ சாப்ட் ஸ்வீட் தெரியுமா ஆனா, அவங்க இப்படி கோபமா பேசறது எனக்கு ஆச்சர்யமா இருக்கு, எதுக்காக உன்னைத் திட்டறாங்க, நீ எனக்கு துரோகம் செய்தேன்னு சொல்றாங்க, எனக்கு புரியலை ஒரே குழப்பமா இருக்கு”

  

”சொல்றேன் அம்மா சொன்னதும் உண்மைதான், நான் சுயநலவாதியாயிட்டேன், என்னோட

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.