(Reading time: 21 - 42 minutes)
Chinna marumagal
Chinna marumagal

  

”என்னோட மாமா பையன்”

  

”ம்”

  

”இப்போ எனக்கு புருஷன்ங்கற பதவியில இருக்காரு”

  

”வாட் உன்னோட ஹஸ்பெண்ட் பத்தியா சொல்ற”

  

”ஆமாம் எனக்கு முறைபையன்கள் ரெண்டு பேரு, ஒண்ணு வேங்கையன், இன்னொன்னு மூர்த்தி மாமா, என் மாமாவுக்கு பிறந்த பையன் வேங்கையன், என் அத்தைக்கு பிறந்த பையன் மூர்த்தி, ரெண்டு பேருக்குமே நான் முறைங்கறதால சின்னப்ப இருந்தே என் கல்யாணம் யார்கூடன்னு சச்சரவு இருந்தது. நான் படிச்சி முடிக்கறவரைக்கும் கல்யாணத்தைப் பத்தி பேச வேணாம்னு முடிவு எடுத்தாங்க ஆனா, எனக்கு வேங்கையனை பிடிக்கலை எனக்கு மூர்த்தி மாமாவைதான் பிடிச்சிருக்கு”

  

”நீ பேசறதை வைச்சே புரிஞ்சிக்கிட்டேன், வேங்கையன்னு சொல்றப்ப மரியாதை இல்லாம வெறுப்பா சொல்ற, அதே மூர்த்தியை பத்தி சொல்றப்ப கனிவா மரியாதையா மாமான்னு சேர்த்து சொல்ற”

  

”உண்மைதான் எனக்கு மூர்த்தி மாமான்னா உசுரு”

  

”அப்புறம் ஏன் நீ மூர்த்தியை கல்யாணம் செய்துக்கலை”

  

”அதான் என் தலையெழுத்து, நானும் மூர்த்தி மாமா மேல பாசமா இருந்தேன் அதே போல அவரும் என் மேல பாசமா இருந்தாரு”

  

”ஏன் வேங்கையன் உன் மேல பாசமா இருந்ததில்லையா”

  

”அவன்லாம் ஒரு மனுஷனா, முரடன், காட்டான், அவனுக்கு பாசம் காட்ட கூட தெரியாது,

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.