(Reading time: 21 - 42 minutes)
Chinna marumagal
Chinna marumagal

”உன் அப்பா அம்மா கிட்ட மூர்த்தி மாமாவை பத்தி தப்புத்தப்பா தகவல் சொல்லி வைச்சேன், அதுல அவங்க இந்த வரன் வேணாம்னு சொல்லிட்டாங்க“

  

”இந்த விசயம் உன் வீட்டுக்கு தெரியும், உன் மூர்த்தி மாமாவுக்கும் தெரியுமா”

  

”தெரியும்”
”அவர் ஏதும் சொல்லலையா, உன்னைத் திட்டலையா”

  

”அதை ஏன் கேட்கற, எனக்கு கல்யாணம் ஆனபின்னாடி நான் மூர்த்தி மாமாவை மறக்காம அவரையே நினைச்சிக்கிட்டு இருக்கேன்னு மூர்த்தி மாமாவுக்கு தெரிஞ்சதும் அவர் வேங்கையனுக்கு பயந்து என்னை விலக்க நினைச்சாரு, எதுக்காகவும் விளையாட்டுக்கு கூட திட்டாத என் மாமா, இப்பலாம் ரொம்ப திட்டறாரு, என்னை பார்த்தாலே வெறுத்து ஒதுங்கறாரு, நான் அவர்கிட்ட பேச போனாலே விரட்டறாரு, என்னால இதை தாங்கிக்கவே முடியலை, பிடிக்காத வாழ்க்கையை வாழவும் பிடிக்கலை பிடிச்சவங்களோட சேரவும் முடியலை நரகம்டி இது”

  

”புரியுது புரியுது ரிலாக்ஸ் ஆனா இதோட அவங்க நிறுத்த மாட்டாங்க ஜானு, இன்னும் பொண்ணு தேடுவாங்க”

  

”தேடட்டும் ஆயிரம் பொண்ணுங்க வந்தாலும் சரி அவங்களை நான் விரட்டுவேன், என் மாமாவை நான் யாருக்கும் தரமாட்டேன்”

  

”உன்னோட இந்த எண்ணம் அவருக்கு தெரியுமா”

  

”தெரியும்”

  

”என்ன சொன்னாரு”

  

”உனக்கு கல்யாணம் ஆச்சி, உன் வாழ்க்கையை வாழு, என் வாழ்க்கையை வாழவிடு, நீ என் வாழ்க்கையில நுழையாதேன்னு சொன்னாரு, அதான் கடைசி அவர் என்கிட்ட பேசினது

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.