(Reading time: 21 - 42 minutes)
Chinna marumagal
Chinna marumagal

யாருக்குதான் ஆசை, வேங்கையன்னா எல்லாருக்கும் பயம்தான்”

  

”உனக்கும் பயமா“

  

”கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் நானும் பயந்தேன், எப்ப கல்யாணம் ஆச்சோ அப்புறம் பயம் விட்டுப்போச்சி”

  

”அப்படின்னா உன் மூர்த்தி மாமா வேங்கையனை எதிர்க்க முடியாம தோத்துப் போயிட்டாரு அதானே”

  

”அதேதான் என்னை கல்யாணம் செய்துக்க முறையிருந்தும் வேங்கையனுக்கு பயந்து மூர்த்தி மாமா விலகிட்டாரு, வேற வழியில்லாம என் கல்யாணம் வேங்கையனோட நடந்துடுச்சி” என சொல்லிவிட்டு கதறி கதறி அழுதாள். அவளின் அழுகை மஹதியை உலுக்கியது. அவள் இரக்கப்பட்டாள், ஜானகிக்கு ஆறுதல் சொல்ல முயன்றாள். எவ்வளவு ஆறுதல் படுத்தியும் ஜானகி அமைதியாகவில்லை

  

”என் வாழ்க்கை இப்படியானதுக்கு முழுக்க முழுக்க அந்த வேங்கையன்தான் காரணம்” என்றாள் கோபமாக அவளின் மனநிலையை புரிந்துக் கொண்ட மஹதியோ

  

”ரிலாக்ஸ் உனக்கு இந்த கல்யாண வாழ்க்கை பிடிக்கலைன்னா சிம்பிள் அந்த வேங்கையனை டைவர்ஸ் பண்ணிடு, இதை நான் சொல்லக்கூடாது ஆனா உன்னோட அழுகையை பார்த்தபின்னாடி நீ எவ்ளோ கஷ்டப்படறேன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது, அதனாலதான் இப்படி சொல்றேன்”

  

”எல்லாம் அதுக்கான வேலைகளையும் பார்த்தாச்சி மஹதி, கோர்ட் வரைக்கும் போய் வந்தோம் கல்யாணம் ஆகி 6 மாசம்தானே ஆகுது, அதனால டைவர்ஸ் தரமாட்டாங்களாம், இன்னும் 6 மாசம் கழிச்சி வரச்சொன்னாங்க, அதுவரைக்கும் இரண்டு பேரும் சேர்ந்து வாழனும்னு ஜட்ஜம்மா சொன்னாங்க, வேற வழியில்லாம தலைவிதியேன்னு அந்த வீட்ல குப்பை கொட்டறேன்”

  

”உனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்காங்க, அதை நீ வேணாம்னு சொல்ற அதானே”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.