(Reading time: 21 - 42 minutes)
Chinna marumagal
Chinna marumagal

ஏறிக் கொண்டார்கள், காரும் புறப்பட்டது. மஹதியோ ஜன்னல் வழியாக ஊரை வேடிக்கை பார்த்தபடி பயணித்தாள். ஜானகியோ டிரைவரிடம்

  

”டிரைவர் அண்ணா நம்ம வீட்டுக்கு போங்க” என சொல்ல டிரைவர் குழம்பி

  

”எங்கம்மா சொல்றீங்க”

  

”என் அம்மாவீட்டுக்கு போங்கன்னு சொன்னேன்” என்றாள் அழுத்தமாக அதைக்கேட்டு டிரைவரும் வியந்தபடியே ஜானகியின் தாய் வீட்டிற்கு வண்டியை திருப்ப மஹதியோ

  

”ஜானு எதுக்காக உன் அம்மா வீட்டுக்குப் போகனும், உன் ஹஸ்பெண்ட்டை நான் பார்க்கலையே, நான் உன்கூட உன் புருசன் வீட்ல தங்கலாம்னு ஆசைப்பட்டு வந்தேன்”

  

”அங்க தங்க எனக்கே பிடிக்கலை, அது ஒரு நரகம் இதுல நீயும் அந்த நரகத்தில மாட்டிக்கனுமா தேவையில்லை, நீயாவது என் அம்மா வீட்ல நிம்மதியா இரு”

  

”என்னடி இப்படி பேசற”

  

”ஷ்ஷ் எல்லாம் நான் அப்புறம் சொல்றேன்” என சொல்ல மஹதிக்கு மனதுள் நெருடலாக இருந்தது.

  

காரும் சிறிது நேரத்தில் ஜானகியின் தாய் வீட்டின் முன் நின்றது. காரை விட்டு இறங்கிய ஜானகி மஹதியை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் அம்மா அப்பா என அழைத்தபடியே பிரவேசித்தாள்.

  

அவளின் அழைப்பில் குபேரன் வேணி இருவரும் ஹாலில் வந்து சேர்ந்தார்கள். மஹதிக்கு அவர்களை நன்றாக தெரியும் என்பதால் நேராக குபேரனிடம் சென்று கைகூப்பி

  

”வணக்கம் அங்கிள் எப்படியிருக்கீங்க” என நலம் விசாரிக்க அவரும் சிரித்த முகத்துடனே

  

”நான் நல்லாயிருக்கேன் நீ எப்படியிருக்க, ஆமா பயணமெல்லாம் நல்லபடியா இருந்ததா

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.