அருண் அஹல்யாவின் ஃபோனில் விளையாடிக் கொண்டிருந்தான்.
“ஹேய் சக்தி, என்ன என் தேன் கிட்ட ரொம்ப நக்கல் விடுற?? ரொம்ப தானே உனக்கு இருந்தாலும்?” சத்யா மெல்லியக் குரலில் சக்தியிடம் கேட்டாள்.
“உன் தேன் என்கிற ஒரே காரணத்துக்காக தான் திட்டாம அப்படி பேசினேன். அவர் செஞ்சது சரியில்லை சத்யா. கேஸை க்ளோஸ் செய்யனும்னு அவர் யோசிக்குறது சரி தான்!. தப்பு செய்தவங்களை அரெஸ்ட் செய்யனும்னு நினைக்குறதை கூட தப்புன்னு சொல்ல மாட்டேன். ஆனால் தேன் மாதிரி ஹானஸ்ட் ஆஃபிசர் ஒருத்தர் அஹல்யா மாதிரி ஒருத்தங்களை விசாரிக்கும் போது இன்னும் சென்சிட்டிவா ஹாண்டில் செய்திருக்கலாம். அபினவும், அஹல்யாவும் அவர் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தாங்க!”
“நீ என்ன சொல்ல வர? எனக்குப் புரியலை,” என்றாள் சத்யா குழப்பத்துடன்.
“தேன் அஹல்யா தான் சேகரனை கொலை செய்ததான்னு சந்தேகப் படுறார். அதை அவங்களே கன்ஃபெஸ் செய்திருவாங்கன்னு நம்புறார்ன்னும் நினைக்கிறேன். இப்போ அஹல்யா கிட்ட பேசும் போது, அமைதியா நல்லவரா பேசி, ‘நீ சேகரனை ஏதாவது செய்திருந்தா தற்காப்புக்கு செய்தேன், இல்லை எதிர்பாராம நடந்திருச்சுன்னு சொல்லி ஒத்துக்கோ. தண்டனை குறைவா இருக்கும்னு’ சொல்லுவார்! கிரிமினல்ஸ்ன்னு இல்லாம தெரியாம தப்பு செய்தவங்களை கன்ஃபெஸ் செய்ய வைக்க காலம் காலமா போலீஸ் பயன்படுத்துற ஒரு டாக்டிக் அது.”
“என்ன?”
சக்தி தன் உதடுகளை வளைத்து இன்ஸ்பெக்டர் மீதிருந்த அதிருப்தியை சத்யாவிடம் காட்டி விட்டு அஹல்யா இருந்த பக்கம் பார்த்தாள்.
🌼🌸❀✿🌷
“அஹல்யா, உங்களை எனக்கு நல்லா தெரியும். நீங்க நல்லவங்கன்னும் தெரியும். சம் டைம்ஸ் வாழ்க்கைல எதிர்பாராத விஷயங்கள் நடக்கலாம். சிலது நம்மை தாண்டி நடக்குறதா கூட இருக்கலாம்.” தென்றல்வாணன் கைடன்ஸ் கவுன்சிலர் போல அமைதியான குரலில்,