தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 46 - பிந்து வினோத்
46. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“ப்ச்... என்னை மக்குன்னு சொல்லிட்டு இப்போ எதுக்கு இந்த கொஞ்சல் எல்லாம்? ஒன்னும் வேண்டாம்... போங்க...” கோபத்துடன் சொல்லிவிட்டு விவேக்கிடம் இருந்து விலகி தள்ளி வந்தாள் பாரதி.
“ஹேய் கண்ணா, என்னடா இதுக்கெல்லாம் இப்படி சினுங்கினால் எப்படி? சரி, இனிமேல் நான் உன்னை அப்படி சொல்ல மாட்டேன்... சரியா?” என சொல்லி வெள்ளைக் கொடி காட்டினான் விவேக்!
“ம்ம்ம்...”
“ஹேய்...”
அப்போது மெலிதாக கதவு தட்டப் படும் ஓசைக் கேட்டது. கதவை திறந்த விவேக், அங்கே வேலையாள் நிற்பதை பார்த்து விட்டு,
“இந்த பெட்டி மட்டும் தான் மணி...” என்றான்.
“சரிங்கய்யா...” என்று பவ்யமாக சொல்லிவிட்டு பெட்டியை தூக்கி சென்றான் மணி.
“சரி ரதி கிளம்புவோமா? நம்ம ஊடல் அப்ப்புறம் கூடல் எல்லாத்தையும் அங்கே ரிசார்ட்ல வச்சுப்போமே...”
கண் சிமிட்டியபடி பேசிய விவேக்கின் பார்வையில் தன்னையும் மீறி சிவந்தவளாய், சரி என தலை ஆட்டினாள் பாரதி.
அவர்கள் அறையில் இருந்து கிளம்ப எத்தனிக்கும் போது, விவேக்கின் செல்ஃபோன் சத்தம் எழுப்பியது. அவசரமாக எடுத்துப் பார்த்தவன்,
“ரதி ஆடிட்டர் பேசுறார். அஞ்சு நிமிஷத்தில வரேன்...”