“உன்னை ரூமை விட்டு வெளியே போன்னு சொல்லி நிறைய நேரம் ஆச்சு!”
“ரைட்! ஆனால் உங்க கிட்ட நான் ஒன்னு சொல்லனும். நானும் பாட்டியும் நீங்க வரதுக்கு முன்னாடி சென்டிமென்டலா பேசிட்டு இருந்தோம்.”
“ஓ, காட்!”
“அதை பேசலை, என்ன பேசினோம்னா, பாட்டி என்னை ரொம்ப மிஸ் செய்றாங்களாம். அவங்க கூடவே வந்து இருக்க சொன்னாங்க. நானும் என்ன செய்யலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன். இப்போ தான் முடிவு செய்தேன்!”
சக்தி பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தாள்.
“என்னன்னு கேட்க மாட்டேங்குறீங்க! போங்க உங்களுக்கு க்யூரியாசிட்டி ஃபேக்டர் குறைச்சலா இருக்கு. இருந்தாலும் சஸ்பென்ஸ் வைக்காம நானே சொல்லிடுறேன். நான் சென்னைல இருக்க என் ப்ராக்டீஸை மூடிட்டு, இங்கேயே வந்திரலாம்னு இருக்கேன். இந்த ஊரு, ஜில்லு ஜில்லுன்னு இருக்க கிளைமேட், கூடவே உங்களை மாதிரி ஜான்சி ராணி மாதிரி அடிச்சுத் தாக்குற பொண்ணுங்க, ஆசம்!!!! எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!”
“அங்கே கிளினிக் ஈ ஓட்டுதா இருக்கும், அதை சொல்லாம இவ்வளவு அலப்பர வேற! இங்கேயும் அதே ஈ தான் ஓட்டனும். பட், நவ் ஷட் அப் அண்ட் கெட் அவுட். இன்னும் பேசிட்டே இருந்தா நல்லா இருக்க அடுத்த கண்ணும் பங்ச்சர் ஆயிடும்!”
“ஓஹோ!!! ரொம்ப பேட் மூட்ல இருக்கீங்க. என் கிளினிக் பத்தி உங்களுக்கு தெரியலை. சீக்கிரமே பார்க்க தான் போறீங்க! நாம அப்புறமா பேச்சை தொடரலாம். இப்போ என் டீயை குடிச்சு ரிலாக்ஸ் செய்ங்க!”
சாந்ததுரை போனப் பிறகு, எழுந்து கதவை தாளிட்டு மூடினாள் சக்தி.