(Reading time: 7 - 14 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

“தேங்க்ஸ் சத்யா. உண்மையாவே இந்த கொஞ்ச நாளா மனசு ரிலாக்ஸ்டா இருக்கு. உன்னை மாதிரி என் கிட்ட ஃப்ரீயா ஜாலியா பேசினவங்க யாரும் இல்லை. அது என்னமோ எல்லோருமே என்னை தள்ளியே தான் வச்சு பேசுவாங்க, பழகுவாங்க. ஃப்ரென்ட்ன்னு எனக்கு யாரும் இல்லை. தேங்க் யூ சோ மச்.”

  

“ஃப்ரென்ட்ஸ்ன்னு சொல்லியாச்சு, அப்புறம் என்ன தேங்க்ஸ்ன்னு எல்லாம் சொல்லிட்டு இருக்க? அதை விடு, நாம வேற டாபிக் போவோம்... ஸ்டேஷன்ல நான் அவர் கிட்ட பேசிட்டு இருந்தப்போ அஹல்யா கிட்ட அப்படி என்ன சொல்லிட்டு இருந்த நீ?”

  

“இன்ஸ்பெக்டர் கேட்குறதுக்கு உண்மையை சொல்ல சொன்னேன். புத்திசாலின்னு நினைச்சு பொய் சொல்ல வேண்டாம்னு சொன்னேன். அப்புறம், எந்த காரணத்துக்காகவும் எதுலேயும் சைன் போட வேண்டாம்னும் சொன்னேன். ஆமா, நீ எப்படி அவரை டாக்கில் செய்த??’

  

“அதெல்லாம் ‘கணவன் மனைவி ரகசியங்கள்’’ எனும் செக்ஷன் உள்ளே வர விஷயம். உன் கிட்ட சொல்ல முடியாது, சாரி!”

  

“சொல்லாட்டி போ! நீ சொன்ன மாதிரி அஹல்யாக்கு ஹெல்ப் செய்யனும் சத்யா. தேர் இஸ் சம் மிஸ்டரி அரவுன்ட் ஹெர்.”

  

“இருக்கலாம் சக்தி. ஆனால் அவங்க கொலை செய்திருக்க மாட்டாங்க.”

  

“உன்னை மாதிரி 100% ஷுயரா என்னால சொல்ல முடியலை சத்யா. பட் ஷீ நீட்ஸ் அவர் ஹெல்ப்! ஏதோ போட்டோஸ் பத்தி அஹல்யா சொன்னாளே, அதை பத்தி அவங்க கிட்ட பேசும் போது என்னன்னு கேட்டு சொல்லு.”

  

“ஓகே சக்தி! போட்டோஸ் பத்தி மட்டும் இல்லை, ஸ்டேஷன்ல என்ன பேசினாங்கன்னு முழு டீடெயில்ஸ் கலக்ட் செய்து சொல்றேன்.”

  

“பார்த்து செய்! உன் இன்ஸ்பெக்டர் தேனுக்கு தெரிஞ்சு கத்தப் போறார்!’

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.