“நினைச்சேன்! நீங்க டையர்டா இருக்கீங்கன்னு நினைச்சேன்!”
சற்றும் எதிர்பாராமல் பக்கத்தில் கேட்ட ஆண் குரலில் துள்ளிக் குதிக்காத குறையாக எழுந்தாள் சக்தி.
“ஹலோ, ஹலோ! எனக்கு எழுந்து நின்னு எல்லாம் மரியாதை தர வேண்டாம் உட்காருங்க. நானும் உட்காருரேன்!” சாந்ததுரை புன்னகை மின்ன சொல்லிக் கொண்டிருந்தான்.
“ஹேய், நீ எப்படி உன் இஷ்டத்துக்கு என் ரூம் உள்ளே வருவ? கெட் அவுட்!” நரம்பு புடைக்க கோபத்துடன் கத்தினாள் சக்தி.
“உங்களுக்கு ரொம்ப கோபம் வருது. இது ஹெல்த்க்கு நல்லது கிடையாது. ஆனாலும் நைட் அடிச்ச மாதிரி அடிச்சுட்டு பேசாம, பேச மட்டும் செய்றீங்களே, அது நல்ல இம்ப்ரூவ்மென்ட்! நான் கதவை தட்டிட்டு தாங்க உள்ளே வந்தேன்.” கேஷுவலாக சொன்னான் சாந்ததுரை.
“முதல்ல என் ரூமை விட்டு வெளியே போ.” கோபம் குறையாமல் சீறினாள் சக்தி.
“போறேன்ங்க! அதுக்கு எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க? ரிலாக்ஸ்...!!!! நான் கீழ ஹால்ல இருந்ததை கூட கவனிக்காம மாடிக்கு வந்துட்டீங்க. ரொம்ப அப்செட் ஆன மாதிரி இருந்துச்சு. அதான் உங்களுக்காக ஸ்பெஷல் ஹெர்பல் டீ ரெடி செய்துட்டு வந்தேன். துளசி, பட்டை எல்லாம் போட்ருக்கேன். குடிங்க. சும்மா ஜிவ்வுன்னு இருக்கும்.”
“ஷிட்!”
“I am a sweet disaster!”
“என்னது???”
“உங்க டீ ஷர்ட்ல எழுதி இருக்குங்க. நைஸ் quote!”