மறுநாள் பொழுது விடிந்தது. மஹதியோ சுறுசுறுப்பாக குளித்து முடித்து வந்தாள். வேணியோ அவளைப் பார்த்து
”என்னம்மா இது சுடிதார்ல வந்திருக்க”
”என்கிட்ட இதுதான் இருக்கு ஆன்ட்டி ஏன் என்னாச்சி“
”நீ இன்னிக்கு வேங்கையன் வீட்டுக்கு போகப் போற, உன் திட்டப்படி எப்படி நடந்துக்கனும்னுகூடவா உனக்குத் தெரியாது”
”நீங்க என்ன சொல்றீங்க ஆன்ட்டி, எனக்குப் புரியலை”
”உன்னோட திட்டத்தில நாங்களும் உதவறதா இருக்கோம்“
”எதுக்கு ஆன்ட்டி நானே தனியாளா இருந்து, பிரச்சனையை சரியாக்கறேன்”
”எங்க உதவி உனக்கு தேவைப்படும், இன்னும் சுலபமா பிரச்சனையை சரியாக்கலாம் மஹதி, எங்க பேச்சை கேளு”
”அப்படியா சொல்றீங்க ஓகே ஆன்ட்டி உங்களுக்கு என்னோட திட்டம் பிடிச்சிருக்கா இல்லையா”
”உன் திட்டப்படி என் பொண்ணு வாழ்க்கை சரியாகுதுன்னா அது போதுமே எனக்கு”
”எப்படியாவது வேங்கையன் வீட்டுக்குள்ள நான் நுழையனும், அதுவும் யாருக்கும் சந்தேகம் வராம அதான் எப்படின்னு தெரியலை, என்னதான் வேங்கையன் எனக்கு உதவி செய்ய வந்தாலும் அவரோட அப்பா அம்மாவை நினைச்சா கொஞ்சம் கலக்கமா இருக்கு ஆன்ட்டி”
”நீ ஏன் பயப்படற, நாங்க எதுக்கு இருக்கோம், நாங்க பார்த்துக்கறோம்”