”ஆமாம் என் பொண்ணுதான் அந்த வீட்டுக்கு மருமகளா இருக்கனும்னு ஆசைப்பட்டு கல்யாணம் செய்து வைச்சேன், என் ஆசை நிராசை ஆயிடுச்சி உன்னைப் பார்த்ததும் எனக்கு பழைய ஞாபகம் வந்தது”
”அங்கிள் கவலைப்படாதீங்க இதெல்லாம் ஒரு நாடகம்தானே, நானே அந்த வீட்ல போய் நடிக்கத்தான் போறேன், நான் ஒண்ணும் வேங்கையனை சொந்தம் கொண்டாடமாட்டேன், என்னிக்கிருந்தாலும் ஜானகிக்குதான் வேங்கையன்” என சொல்ல அவ்விருவரும் மகிழ்ந்தார்கள் ஆனால் மஹதியின் உள்ளம்தான் கனத்துவிட்டது. சட்டென கண்கள் கலங்கிவிட்டாள். அதைக்கண்ட வேணியோ
”என்னம்மா ஏன் கண்கலங்கற”
”ஒண்ணுமில்லை ஆன்ட்டி”
”எனக்கு தெரியும் நீ ஏன் கண்கலங்கற” என குபேரன் சொல்லவும் அவளுக்கு திக்கென்றது
”அங்கிள் அதுவந்து நானு”
”ஜானகியை பொறுத்தவரைக்கும் துரோகம் இழைக்கறதா நீ நினைக்கற அதானே” என சொல்ல அவளோ நிம்மதியானாள்
”கவலைப்படாத ஜானகி இப்ப புரிஞ்சிக்கலைன்னாலும் பின்னாடி புரிஞ்சிக்குவா”
”சரிங்க அங்கிள் அப்ப நாம கிளம்பலாமா”
”ஓ தாராளமா எதுக்கும் டிபன் சாப்பிட்டு தெம்பா கிளம்புவோம், அங்க போனதும் என்ன மாதிரியான சூழ்நிலை அமையுமோ”
”ஏன் அப்படி சொல்றீங்க அங்கிள், அங்கதான் வேங்கையன் நமக்கு துணையா இருக்காரே