”என்ன செய்யப் போறீங்க ஆன்ட்டி”
“ஜானகியை கட்டிக்கொடுத்து வேங்கையன் வாழ்க்கை நாசமானதால எங்களுக்கு குற்ற உணர்ச்சி வந்துடுச்சி, எப்படியிருந்தாலும் 6 மாசம் கழிச்சி என் பொண்ணு வேங்கையனை விட்டுட்டு மூர்த்திகிட்ட வந்துடுவா, அப்புறம் வேங்கையன் வாழ்க்கை என்னாகிறது, அதனால நாங்க செஞ்ச தப்புக்கு பிராயசித்தமா எங்களுக்கு தெரிஞ்ச மஹதிங்கற பொண்ணை வேங்கையன் கல்யாணம் பண்ணிக்க கூட்டிட்டு வந்தோம்னு சொல்றோம்“
”அவங்க ஏன் இப்பவே கூட்டிட்டு வந்தீங்கன்னு யாராவது கேட்டா என்ன செய்றது ஆன்ட்டி”
”ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கட்டும், கல்யாணம் ஆன பின்னாடி ரெண்டு பேரும் புரிஞ்சி அது பிடிக்காம போனா மறுபடியும் கோர்ட் டைவர்ஸ்னு அலையனும் ,அதுக்கு பதிலா முன்னாடியே பார்த்து பேசி பழகினா சரியாயிடும்லன்னு சொல்வோம்“
”ஆனா கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி ஒரு பொண்ணை வீட்ல வைச்சிருக்கறது இதுக்கு ஊர் ஒத்துக்காதுன்னு சொன்னா என்ன செய்வீங்க ஆன்ட்டி”
”இந்த மஹதி யாரோ இல்லை என் பொண்ணோட தோழிதான், அவள் தோழிவீட்டுக்கு வந்திருக்கான்னு ஊர் நம்பும், ஜானகியும் உன்னோட திட்டத்தை புரிஞ்சிக்காம, உனக்கு அடைக்கலம் தருவா, வேங்கையன் உனக்கு ஆதரவு தருவான் எப்படிப்பார்த்தாலும் உனக்கு பிரச்சனை வராது”
”மூர்த்தி கெட்டவன், அதை ஜானகிக்கு புரிய வைக்கிறேன் அதை அவள் புரிஞ்சிக்கிட்டாலே மூர்த்தியை அவள் விட்டுடுவா ஆன்ட்டி”
”நல்லது நீ வா”
”எங்க ஆன்ட்டி“