(Reading time: 18 - 35 minutes)
Chinna marumagal
Chinna marumagal

அப்புறம் என்ன”

  

”வேங்கையன் இருந்தாலும் அவனோட அப்பா வீரசிங்கம் இருக்காப்லயே அதான் பயமாயிருக்கு”

  

”பயமா அப்போ வீரசிங்கம் ரொம்ப ஆபத்தானவரா”

  

”ஆமாம் அவருகிட்ட நாம ஜாக்கிரதையா இருக்கனும்”

  

”அப்போ வேங்கையனோட அம்மா, எப்படி நமக்கு துணையா இருப்பாங்களா“

  

”யாரு மங்களத்தை சொல்றியா, அவள் அப்படியே வேங்கையன் போலதான், ரெண்டு பேருக்கும் நல்ல மனசு அவங்க உனக்கு துணையா இருப்பாங்க, நீ எதுக்கும் கவலைப்படாத, வீரசிங்கத்தை சமாளிச்சா போதும் உன் திட்டம் தடையில்லாம நிறைவேறிடும்” என சொல்ல அவளும் வீரசிங்கத்தை நினைத்து கலங்கினாலும், வேங்கையன் துணையிருக்கிறான் என்ற நம்பிக்கையில் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள்.

  

அம்மூவரும் திருப்தியாக டிபன் சாப்பிட்டு முடித்துவிட்டு கிளம்பினார்கள்.

  

”நாம திடுதிப்புன்னு போனா ஜானு அப்படியே ஷாக்காயிடுவா” என்றாள் மஹதி

  

”ஆகட்டும்”

  

”அவளுக்காவது என் திட்டம் தெரியாம இருந்தா சரி அவள் மட்டும் கண்டுபிடிச்சிட்டா மொத்த திட்டமும் பாழாயிடும்” என கவலைப்பட

  

”அவளுக்கு அந்த அளவுக்கு புத்தி வேலை செய்யாது, நீ கவலைப்படாத வா“ என அவளை அழைத்துக் கொண்டு குபேரன் தன் மனைவியுடன் வேங்கையன் வீட்டிற்குச் சென்றார்.

  

பக்கத்து தெரு என்பதால் நடந்தே சென்றார்கள். போகும் வழியெங்கும் மஹதியை கண்டு மக்கள் வாய்பிளந்தார்கள், சிலர் அவள் யார் என்னவென கேட்க குபேரன் சிறிதும் தயங்காமல்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.