(Reading time: 7 - 14 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

இயல்பாக ஒலித்த அவளின் குரல், அவன் சொன்னதை அவள் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை தெளிவாக சொன்னது!

  

பாரதி...”

  

உங்களுக்கு நிறைய வேலை இருக்கே நீங்க கண்டின்யூ செய்ங்க...”

  

அது எனக்கு தெரியும் நீ சொல்லி நான் செய்ய வேண்டியது இல்லை...”

  

விவேக்கின் குரலில் கூடி இருந்த கடுமை புரிந்து, இவனுக்கு திடீரென என்னவாகி விட்டது என மனதில் குழம்பி நின்றாள் பாரதி... அவள் அருகில் வந்த விவேக், கையில் இருந்த செக்கை அவளின் கையில் வலுக்கட்டாயமாக திணித்து விட்டு,

  

இது போல இனிமேல் என்னை கேட்காமல் நீ எனக்கு எதையும் வாங்க வேண்டாம்... இந்த பணம் எல்லாம் உனக்கு தேவைப்படும். இனிமேல் இப்படி தேவை இல்லாமல் செலவு செய்யாதே...” என்றான்!

  

பதில் சொல்ல பாரதி வாயை திறக்கும் போதே, ஒரு கை அசைப்பில் அவளை தடுத்து விட்டு, அவனே தொடர்ந்துப் பேசினான்.

  

இனிமேல் என்னால தினமும் உன் காலேஜுக்கு வர முடியாது. டிரைவரை உன்னை காலைல ட்ராப் செய்து, ஈவ்னிங் பிக் அப் செய்ய சொல்லி இருக்கேன்...”

  

அவன் சொன்ன விதத்தை விட, சொன்ன விஷயம் பாரதியை ரொம்பவே வருத்தப் படுத்தவும்,

  

தேவை இல்லை... என் விஷயத்தை நானே பார்த்துப்பேன்... நீங்க கவலைப் பட வேண்டாம்” என்று விறைப்புடன் சொல்லி விட்டு அங்கே இருந்து நகர்ந்தாள் அவள்.

  

🌼🌸❀✿🌷

5 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.