(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

செய்துக்க போற அபினவ் ஒரு சப் இன்ஸ்பெகடர்???”

  

“அதுக்கும் ஏதாவது காரணம் இருக்கலாம். இந்த சேகரன் கேஸே கூட காரணமா இருக்கலாம்!”

  

“அஹல்யா அபினவை சந்திக்குறதுக்கு முன்னாடியே உங்களை சந்திச்சிருக்காங்க. உங்க கிட்ட ஏதாவது தப்பா பார்த்தாங்களா, பேசினாங்களா?”

  

தென்றல்வாணன் அமைதியாக இருந்தான்.

  

“ஒரு பழமொழி சொல்வாங்க. காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம். உங்களுக்கும் இப்போ அது தான் பிரச்சனை. அந்த கேஸ்ல அஹல்யாவை தவிர வேற யாரையும் உங்களால லிங்க் செய்ய முடியலை. அதனால நீங்களாவே எல்லாத்தையும் தப்பா பார்க்குறீங்க!”

  

“சத்யா, என்னை உன் ஐடியா வச்சு இன்ஃப்ளூயன்ஸ் செய்யாதே!”

  

“செய்யலை! உங்களையே சரியா யோசிக்க சொல்றேன். இப்போ வந்து சாப்பிடுங்க!”

  

“அஞ்சு நிமிஷத்துல வரேன்.”

  

தொடர்ந்து விவாதம் செய்துக் கொண்டிருக்காமல் சத்யா அங்கிருந்து சென்றாள். தென்றல்வாணன் சந்தேகத்துடன் கையிலிருந்த ஃபைலை பார்த்தான். சத்யா சொன்னது சரி தானா? தேவையே இல்லாமல் அதிகமாக அஹல்யாவை சந்தேகப் படுகிறானா???

  

அஹல்யா பெயரில் இருந்த மும்பை கேஸை விசாரித்த இன்ஸ்பெக்டர் விஷ்வக்கை ஃபோனில் தொடர்புக் கொண்டு நேரடியாக பேசுவது என்று முடிவு செய்துக் கொண்டான்.

  

“உங்களுக்கு டேபிள்ல எல்லாம் எடுத்து வச்சிருக்கேன். சாப்பிடுங்க. அருண் குல்ஃபி பிடிக்கும்ன்னு சொன்னான். நான் செய்ததை கொடுத்துட்டு வரேன்!” தென்றல்வாணன் உதடுகளை அசைக்கவும் நேரம் கொடுக்காமல் மின்னல் வேகத்தில் தகவல் சொல்லி விட்டு சென்றாள் சத்யா

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.