(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

🌼🌸❀✿🌷

   

க்கத்து போர்ஷன் கதவை சத்தமாக தட்டினாள் சத்யா.

  

“யாரு?” அஹல்யாவின் குரலில் நடுக்கம் கலந்திருந்தது.

  

“நான் சத்யா அஹல்யா!”

  

கதவு உடனே திறந்துக் கொண்டது.

  

“தப்பா நினைச்சுக்காதீங்க. இருட்டா இருக்கவே யாருன்னு தெரியலை,” என்றாள் அஹல்யா.

  

“தப்பா நினைக்க என்ன இருக்கு? நல்ல பழக்கம் தான்! நேத்து அருண் குல்ஃபி பிடிக்கும்ன்னு சொன்னான். செய்து தரேன்னு சொல்லி இருந்தேன். இப்போ தான் ஃப்ரீசர் பார்த்தேன். ரெடியாயிடுச்சு. அவனுக்கு கொடுக்கலாமேன்னு வந்தேன்.”

  

“குல்ஃபியா?” துள்ளிக் குதித்த அருண், அஹல்யாவின் முகத்தை பார்த்து விட்டு அமைதியானான்.

  

“என்னங்க அஹல்யா, சின்ன பையனை போய் முறைக்குறீங்க? என் கிட்ட தானே சொன்னான்?” சத்யா உரிமையுடன் அருணை கையில் தூக்கிக் கொண்டாள்.

  

“அம்மாக்கும் சேர்த்து இரண்டு எடுத்துட்டு வந்தேன். இப்போ அம்மாக்கு கிடையாது, இரண்டும் அருணுக்கு தான்!”

  

கண்கள் மின்ன சத்யா கொடுத்ததை வாங்கிக் கொண்டான் அருண். சீசர் சத்யா பக்கத்தில் வந்து ‘ங்ம்’ ‘ங்ம்’ என்றது.

  

“உனக்கும் வேணுமா? இரு தரேன்!” அருணின் கையிலிருந்த குல்பியில் சின்ன துண்டை

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.