(Reading time: 32 - 64 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

  

”என்ன அங்க சத்தம்”

  

”என்னை நானே திட்டிக்கிட்டேன் எனக்குன்னு இருந்த மரியாதையையும் இழந்துட்டேன் திரும்ப என்ன செய்தா போன மரியாதை திரும்பும்னு என்கிட்ட நானே பேசிக்கிட்டேன் போதுமா”

  

”ப்ச்” என அவள் சலித்துக் கொள்ள

  

”அதுக்கில்லை ஒரு தாளாளர் அதுக்காகவாவது சார்ன்னு சொன்னா நல்லாயிருக்கும்ங்கறது என்னோட அபிப்பராயம்” என சொல்ல அவளோ சலித்துக் கொண்டே

  

”என்ன விசயம் சார் சொல்லுங்க சார்” என்றாள் கோபமாக அதில் அவனும் தனது திட்டத்தை வெளிப்படுத்தினான்

  

”இப்பவே நிறைய நாள் வீணா ஓடிப்போயிடுச்சி“

  

”எதுக்கு”

  

”அதான் பாடம் எடுக்காம மாணவர்களோட நாள் வீணாயிடுச்சி இன்னும் 2 மாசத்துல செமஸ்டர் எக்ஸாம் வருது அதுக்குள்ள பாடம் எடுக்க முடியாது அதனால”

  

“அதனால”

  

”பரிட்சைக்கு வர்ற கேள்விகளுக்கு உண்டான பதிலை மட்டும் பாடமா எடுத்துட்டா இந்த செமஸ்டர்ல யாரும் பெயில் ஆக மாட்டாங்கள்ல” என சொல்ல அவளோ வியந்தாள்.

  

”இது நாம நினைச்ச திட்டமாச்சே இதையேதான் இவரும் யோசிச்சிருக்காரு, ஆனா மாதவி சொன்னது சரிதானே இந்த செமஸ்டருக்கு இப்படி ஒரு வாய்ப்பு தந்தா ஒவ்வொரு செமஸ்டருக்கும் எதிர்பார்ப்பாங்களே கூடாது கூடாது” என நினைத்தவள் அவனிடம் கோபமாக

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.