எடுத்துடலாம் மொத்த பாடத்தையும் எடுக்க வேணாம்”
”அதெப்படி செய்ய முடியும் கேள்வித்தாளை நாமளா தயாரிக்கிறோம் அது யூனிவர்சிட்டியில இருந்து வருது அதுல என்ன கேள்வியிருக்குன்னு நமக்கென்ன தெரியும்”
”அது ரொம்ப ஈசி இதுவரைக்கும் 10 வருஷ கேள்வித்தாளை புரட்டினோம்னா எந்தெந்த கேள்விகள் அடிக்கடி வருது எது முக்கியம் எது முக்கியமில்லைன்னு நம்மால ஈசியா கண்டுபிடிச்சிட முடியும்”
”ஒருவேளை நாம எடுக்காத பாடத்தில இருந்து கேள்வி வந்துட்டா என்ன செய்றது“
”பிரின்சிபால் சொன்னதை எல்லாரும் மறந்துட்டீங்களா மாணவர்களை பர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ண சொல்லலை, பாஸ் மார்க் எடுக்கதான் சொல்லியிருக்காங்க, இந்த செமஸ்டருக்கு மட்டும் நாம இதை போல செய்யலாம், மாணவர்கள் மட்டும் அரியர் வைச்சாங்க நம்ம வேலைக்குதான் ஆப்பு வரும் என்ன சொல்றீங்க”
”நல்ல திட்டம்தான் இதை நீ மட்டும் செய்திருக்கலாமே எதுக்கு எல்லாருக்கும் சொல்லனும்”
”நான் மட்டும் இதை செய்தா மாட்டிக்குவேன், நாம எல்லாரும் இதை செய்தா யாருக்கும் வித்தியாசம் தெரியாது அதான் என்ன இந்த திட்டப்படி நடந்துக்கலாமா” என கேட்க மற்றவர்களும்
”சரி சரி” என தலையாட்டிவிட்டு தங்கள் வகுப்புகளுக்குச் சென்றனர்.
சிலம்புவும் நிம்மதியாகி தன் வகுப்புக்குச் சென்றான். அவனது திட்டப்படியே மற்ற ஆசிரியர்களும் செயல்படத் தொடங்கினார்கள்
மறுபக்கம் கம்பெனிக்குள் வந்த கோவலனோ கோபத்துடன் நுழையும் போதே மாதவி மாதவி என அழைத்தபடி வர அவளோ நொந்தேப் போனாள், அவளுடன் வேலை செய்தவர்கள் அவளைப் பார்த்து பாவப்பட்டார்கள், அவளும் அவசர அவசரமாக அவன் முன் வந்து நின்றாள்.