(Reading time: 32 - 64 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

முக்கியமானதை மட்டும் பாடமா எடுக்கலாம், அப்ப மாணவர்கள் பாஸ் மார்க்காவது எடுப்பாங்க, அரியர் வைக்க மாட்டாங்கன்னு சொன்னேன் அது தப்பாம் சம்மதிக்க மாட்டேன்னு சொல்லிட்டா, எனக்கு கடுப்பா வருது மாதவி, இந்த யோசனையில என்ன தப்பிருக்கு சொல்லு” என கேட்க அவளோ நொந்துப் போனாள்

  

”ஆஹா காலையிலதான் கண்ணகி இந்த விசயத்தை சொன்னா அது தப்புன்னு அவளை திட்டி அனுப்பினோம் இப்ப அதையே இவரும் சொன்னா இவரை எப்படி திட்டறது, ஷ்ஷ் எனக்கு மட்டும் ஏன்தான் தினுசுதினுசா பிரச்சனை வருமோ” என நினைக்க அவனோ

  

”என்ன அமைதியா நிக்கற பதில் சொல்லு மாதவி நான் சொன்னது தப்பா”

  

”சே சே தப்பில்லை தப்பேயில்லை” என சொல்லி தன்னையே மனதுள் திட்டிக் கொண்டவள் அவனிடம்

  

”கோவலன் நான் ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க கூடாது”

  

”நீ சொல்லு மாதவி, உனக்கு உரிமையிருக்கு நீ என்ன சொன்னாலும் அதுல நியாயம் இருக்கும், நான் தப்பா நினைக்க மாட்டேன்“

  

”உங்க திட்டம் உங்களை பொருத்தவரைக்கும் இப்பயிருக்கற நிலைமைக்கு ஒத்துவரும் ஆனா உங்க திட்டத்தை நாம இப்ப செயல்படுத்தினா அப்புறம் ஒவ்வொரு செமஸ்டருக்கும் மாணவர்கள் அதையே எதிர்பார்ப்பாங்க, நம்மால செய்ய முடியாது அப்ப என்னாகும் மறுபடியும் காலேஜ்ல மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே தகராறு வரும்“

  

”ஆனா எக்ஸாம் வருதே மாணவர்கள் பெயில் ஆனா”

  

”ஆகட்டும் அப்படி ஆனாதான் அடுத்த முறை பெயில் ஆககூடாதுன்னு பயந்து ஒவ்வொரு மாணவனும் நல்லபடியா படிப்பான் அவனுக்கு நாம படிப்பு சொல்லித்தரனும், குறுக்குவழியை கத்துக் கொடுக்க கூடாது, அப்புறம் அதையே வேணும்பான் நாமளே ஏன் தப்பான விசயத்தை மாணவர்களுக்கு போதிக்கனும், அரியர் வைச்சா என்ன தப்பு நான்கூட படிக்கறப்ப அரியர் வைச்சேன், அப்புறம் கடைசி வருஷத்துல எல்லாத்தையும் க்ளியர் பண்ணிட்டேன்,

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.