ஒரு வகுப்பில் சிலம்புவோ ஒரு மாணவனை திட்டிக் கொண்டிருந்தான்
”ஈசியான வழியை சொல்லியும் அதை கூட புரிஞ்சிக்க தெரியலை முட்டாள் முட்டாள் இதைப்பாரு இது முக்கியமான கேள்வி, உன்னால இதை படிக்க முடியுமா முடியாதான்னு நான் கேட்கலை இதை நீ படிச்சே ஆகனும்னு சொல்றேன் புரியுதா”
என கத்த அவனோ
”சார் எனக்கு இது விளங்கவே மாட்டேங்குது, நீங்களும் இதை பத்தி பாடம் எடுக்கலை படிபடின்னா எப்படி சார் படிக்கறது”
”மக்கப் பண்ணு கண்ணை மூடி மனப்பாடம் செய், அதுல என்ன இருக்கு என்ன விளக்கம்லாம் உனக்கெதுக்கு, இன்னும் 2 மாசத்துல செமஸ்டர் வரப்போகுது அப்ப இந்த கேள்வி வந்தா என்ன செய்வியாம், புரியலைன்னாலும் மனப்பாடம் செய்து எக்ஸாம்ல வாந்தியெடு போதும் படி” என அதட்ட அவனோ நொந்துப் போனான் அதைக்கேட்டபடி வந்த கண்ணகியோ
”என்ன சார் செய்றீங்க” என கேட்க சிலம்புவோ அவள் வந்ததைக்கண்டு வெறுப்புற்றான்
”பார்த்தா தெரியலை பாடம் எடுக்கறேன்” என திமிராகச் சொல்ல அவளோ போர்ட் பார்த்தாள் அதில் வரிசையாக கேள்விகள் எழுதப்பட்டிருக்க அதைக்காட்டி
”என்னது அது”
”முக்கியமான கேள்விகள் எழுதியிருக்கேன், இதுக்கு மட்டும் பதில் எழுதினா போதும் செமஸ்டர்ல பாஸ் மார்க் எடுத்துடலாம்”
”இந்த கேள்விகள் தவிர்த்து பிற கேள்விகள் வந்தா”
”வராது”