”எப்படி அவ்ளோ உறுதியா சொல்றீங்க”
”10 வருஷத்தோட கேள்வித்தாள்களை புரட்டி பார்த்து இந்த கேள்விகளை எடுத்து எழுதியிருக்கேன், பிற கேள்விகள் வந்தாலும் இதுல வர்ற கேள்விகளும் கண்டிப்பா கேள்விதாள்ல இடம்பெறும், அப்போ இந்த கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதினா போதும் பாஸ் மார்க் வந்துடும், மற்ற கேள்விகளை சாய்ல விடவேண்டியதுதான்” என அலட்சியமாக சொல்ல அவளோ அவனது குறுக்கு புத்தியைக்கண்டு கோபம் கொண்டாள், ஆனாலும் அவன் போர்டில் எழுதி வைத்த கேள்விகளைக்கண்டு முதல் கேள்வியை படித்துவிட்டு அங்கிருந்த மாணவர்களிடம்
”இந்த முதல் கேள்விக்கு யாருக்கு எல்லாம் பதில் தெரியும்” என கேட்க சிலர் கைதூக்கி தெரியும் என்றார்கள் சிலர் படிக்க வேண்டும் என்றார்கள், அதனால் தெரியும் என்ற சில மாணவர்களிடம் இருந்து ஒருவனை தேர்ந்தெடுத்து பதில் சொல்ல சொன்னாள், அவனும் மனப்பாடம் செய்ததை அப்படியே ஒப்பித்தான் அடுத்து அவளோ அதற்கான விளக்கம் கேட்க அவனோ தெரியாது என்றான்
”தெரியாதா அப்புறம் எப்படி இந்த பதிலை புரிஞ்சி படிச்சிருக்க”
”மனப்பாடம் செய்தேன்”
”அப்போ இதுக்கான விளக்கம் தெரியாதா உனக்கு”
”சாரே இதை விளக்கமா பாடம் எடுக்கலை, கொடுத்திருக்கிற கேள்விகளுக்கு உண்டான பதிலை மட்டும் படிச்சா போதும்னு சொல்லிட்டாங்க அவ்ளோதான்”
”ஓஹோ அப்படியா” என சொல்லியவள் சிலம்புவைப் பார்த்து
”பாடமே எடுக்கலையா நீங்க”
”2 மாசத்துக்குள்ள முழு பாடத்தையும் எடுக்க முடியாது அதான் இப்படி செய்தேன்”