”சரி அப்படின்னு பார்த்தாலும் நீங்க முக்கியம்னு சொல்லிய கேள்விக்குன்டான பதிலையாவது விளக்கமா பாடம் எடுத்திருக்கலாமே“
”ஆமா அப்படியே எடுத்தா மட்டும் இவங்களுக்கு என்ன புரியவா போகுது, இல்லை இவங்க படிச்சி முடிச்சதுக்கு அப்புறம் இந்த கேள்விகள் என்ன பிரயோசனப்படப்போகுதா, அவனவன் கிடைச்ச வேலையில சேரபோறான், படிச்ச படிப்பு எங்கயுமே உதவாது” என சொல்ல அவளோ
”இப்படி பொறுப்பில்லாம பேசாதீங்க”
”இப்படி செய்தாதான் எந்த மாணவனும் அரியர் வைக்க மாட்டான்” என சொல்ல அவளோ கோபம் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறி தனது அறை்ககுச் சென்றவள் ப்யூனிடம் சொல்லி லன்ச் பிரேக் நேரம் அனைத்து ஆசிரியர்களையும் ஆடிட்டோரியத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்க சொன்னாள்.
அதன்படி ப்யூனும் அனைவருக்கும் அழைப்பு விட்டான். கண்ணகியோ உடனே கோவலனுக்கு போன் மூலம் அழைப்பு விடுத்தாள். அவனும் என்ன பிரச்சனை என தெரியாமல் பதட்டமாகவே கல்லூரிக்கு வந்தான்.
லன்ச் டைமில் ஆடிட்டோரியத்தில் அனைத்து ஆசிரியர்களும் கண்ணகி தாளாளர் உள்பட வந்து சேர்ந்தார்கள்.
கோவலனோ கண்ணகியிடம்
”எதுக்காக எல்லாரையும் கூப்பிட்டிருக்க ஏதாவது பிரச்சனையா இல்லை முக்கியமான தகவல் ஏதாவது இருக்கா” என கேட்க அவளோ நடந்ததை அப்படியே அவனிடம் சொல்லி
”இது உங்க வேலையா நீங்க சொல்லித்தான் உங்க நண்பர் செய்றாரா”
”சத்தியமா நான் சொல்லலை, என்னைப் போல அவங்களும் ஈசியான வழிமுறையை