(Reading time: 32 - 64 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

  

”நீ உள்ளயே இரு இந்த பிரச்சனையை நான் சரியாக்கறேன்”

  

”இல்லை நானே பார்த்துக்கிறேன்”

  

”அம்மா தாயே உன்னால ஒவ்வொரு நாளும் இங்க பிரச்சனை வரனுமா, அவங்க ஒண்ணு சொல்வாங்க நீ ஒண்ணு செய்து வைப்ப, மறுபடியும் ஸ்ட்ரைக்குன்னு அவங்க கிளம்புவாங்க, அப்புறம் என் காலேஜ் பத்தி வெளிய எல்லாரும் தப்பா பேசுவாங்க, இந்த முறை என்னோட காலேஜை நான் காப்பாத்திக்கிறேன் உனக்கு துணையா இருக்கறதா நான் சொன்னேன்ல அதனால நீ பேசாம இரு போதும்” என திடமாகச் சொல்ல அவளோ அமைதி காத்தாள்.

  

அவனும் மாணவர்களின் முன் வந்து நிற்க அவர்கள் மரியாதையுடன் வணக்கம் வைக்க அவனுக்கு தலையில் கிரீடம் வைத்தது போல ஆனது. மகிழ்வுடன் அவர்களிடம் பேசினான்

  

”என்ன விசயம் எதுக்காக மறுபடியும் ஸ்ட்ரைக் பண்றீங்க” என கேட்க அதற்கு ஸ்டூடன்ட் சேர்மன் முன் வந்தான்

  

”சார் நீங்க செய்றது உங்களுக்கே நியாயமா படுதா, சனி ஞாயிறு கூட காலேஜ் வைச்சா எப்படி சார், எங்களோட சுதந்திரத்தை பறிக்காதீங்க, எங்களுக்கு என்ன வீடு இல்லையா வாசல் இல்லையா, எங்க குடும்பத்தோட நாங்க நேரம் ஒதுக்க வேணாமா, உங்களுக்கு காலேஜோட பேர் புகழ் கிடைக்கனும்ங்கறதுக்காக பாவப்பட்ட எங்களை இப்படி கொடுமைப்படுத்தறீங்களே, இது அநியாயம் சார்” என பொங்கி எழ கோவலன் அதிர்ந்து என்ன சொல்வதென தெரியாமல் யோசிக்க அவனது யோசனையைக்கண்டு நொந்துப் போன கண்ணகியே முன் வந்து சத்தமாகப் பேசினாள்

  

”சனி ஞாயிறு கல்லூரி வேணாம்னு நீங்க சொல்றீங்க சரி, அப்ப செமஸ்டர் எக்ஸாம் எப்படி எழுதுவீங்க, இத்தனை நாள் வீணாயிடுச்சி, உங்க ஆசிரியர்கள் கூட இறங்கி வந்து எல்லா பாடத்தையும் எடுக்காம முக்கியமான கேள்விகளுக்குண்டான பாடத்தை எடுக்க முடிவு எடுத்திருக்காங்க, அதை எடுக்கனும்னா கூட நேரம் பத்தலைன்னு அவங்க குறைப்பட்டதாலதான் நான் இந்த முடிவு எடுத்தேன், அதுக்கே கல்லூரி நேரத்தை

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.