என சொல்ல சொல்ல கிளிப்பிள்ளை போல மாணவர்களும் கூடவே சொன்னார்கள் அதற்கான விளக்கத்தையும் அவளே சொன்னாள்.
மனம் விரும்புவதையெல்லாம் செய்யக் கூடாது. பகைவனை உறவென்று கொள்ளக் கூடாது. பொருளைத் தேடிச்சேர்த்து, பின் அதை அனுபவிக்காமல் பாதுகாக்கக் கூடாது. தர்மம் செய்யாமல் இருக்கக் கூடாது. துன்பத்தில் முடியும் கோபத்தை கொள்ளக்கூடாது. கோபத்தோடு இருப்பவரிடம் செல்லக்கூடாது. மனமே! காட்டில் விலங்குகளைத் தேடித் திரிகின்ற குறவர் மகளான வள்ளி மணவாளனான, மயில் வாகனனான, முருகப் பெருமானை போற்றுவாய்.
அவள் சொன்ன விளக்கம் அனைவரின் மனதையும் மாற்றியது அவர்களின் முகத்தில் ஒரு தெளிவு தெரிவதைக்கண்டவள்
”முடிஞ்சிடுச்சி நீங்க எல்லாரும் வகுப்புக்குப் போகலாம்” என சத்தமாக பேசிவிட்டு சட்டென தன் அறைக்குள் நுழைந்தாள்.
அவளின் பேச்சைக் கேட்டு கோவலன் கூட ஸ்தம்பித்தான்
”ப்ப்பா பட்டாசு மாதிரி வெடிக்கறாளே இல்லை இல்லை, இவள் ஆட்டம்பாம்தான் அதுவும் இல்லை இவள் கன்னிவெடிதான், காலை எடுத்தோம் டமால் நாம க்ளோஸ் ஆயிடுவோம், எதுக்கும் இவள்கிட்ட நாம போகவே கூடாது, தேவையில்லாம இவள்கிட்ட காலைவிட்டு நாம காலியாக வேணாம்” என நினைத்தபடியே கம்பெனிக்குச் சென்றான் கோவலன்.
மாணவர்களும் கண்ணகி சொன்னதை நினைத்து ஸ்ட்ரைக்கை விட்டு அவரவர்கள் தங்கள்