(Reading time: 32 - 64 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

கோபத்துக்கும் நான் ஆளாகனுமே, இப்ப என்ன செய்றது ஒண்ணுமே புரியலையே” என நினைத்து சில நிமிடங்களை வீணாக்கினான். பின்

  

”வேற வழியில்லை கண்ணகி சொன்னது போல செய்யலாம் இல்லையா மாணவர்களோட மகிழ்ச்சியை கருதி இதை செய்யாம விடலாம், எதுக்கும் பூவா தலையா போட்டுப் பார்க்கலாம்” என நினைத்தபடியே நாணயத்தை சுண்டினான்

  

”பூ விழுந்தா மாணவர்களின் சந்தோஷம் தலை விழுந்தா கண்ணகியோட முடிவு”  என சொல்லிக் கொண்டே பார்க்க அந்த நாணயம் தலை பக்கம் விழவே அதிர்ந்தான். அடுத்து அவனே போன் மூலம் கண்ணகியிடம் அவளது முடிவை செயல்படுத்துமாறும் அதற்கு தான் துணையாக இருப்பதாகவும் சொல்ல அவளுக்கு பெரிய வெற்றி கிடைத்தது போலானாது.

  

அதனால் காலம் தாமதிக்காமல் உடனே ப்யூனிடம் ஒரு சர்க்குலர் கொடுத்தாள், அதன்படி அவனும் ஒவ்வொரு வகுப்பாகச் சென்று படித்து காட்டினான் அதில் சனி ஞாயிறு கூட கல்லூரி இருக்கறது என வரவும் மாணவர்கள் அதிர்ச்சியானார்கள்.

  

சிலம்புவுக்கு இது நல்ல வாய்ப்பாக இருந்தது, அவன் மாணவர்களை ஏற்றிவிட்டு அவர்கள் கொதித்தெழ திட்டம் போட்டான், தனது திட்டத்தை தோற்கடித்தாளே என்ற பழிஉணர்ச்சி அவனை இந்தளவு யோசிக்க வைத்தது, மாணவர்களும் தங்களுக்குள் பலவிதமாக பேசிக் கொண்டார்கள்.

  

கண்ணகியும் கண்டிப்பாக பிரச்சனை எழும் என காத்திருந்தாள், கோவலனும் கண்ணகியின் செயலால் மறுபடியும் மாணவர்களிடம் எழுச்சி எழும், அந்த சமயம் தான் இங்கு இருக்க வேண்டும் என நினைத்து அவனும் காத்திருந்தான்.

  

அவர்கள் எதிர்பார்த்தபடியே மாணவர்களுக்குள் எழுச்சி எழுந்தது மீண்டும் ஆஆஆ ஓஓஓ என கத்திக் கொண்டு மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு வெளியேறி பிரின்சிபால் அறை முன்பு திரண்டு நின்றார்கள்

  

”பிரின்சிபால் டவுன் டவுன்” என முழக்கமிட கண்ணகி இதை எதிர்பார்த்ததுதான் அதனால் அவள் வெளியே வந்து அவர்களை சரியாக்குவதற்குள் கோவலன் முந்திக் கொண்டு அவளிடம்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.