அதிகப்படுத்தலாம்னு கூட சொன்னேன் ஆனா உங்களை மேலும் கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு விட்டுட்டேன்
நீங்க செமஸ்டர்ல பாஸ் ஆகனும்னு நினைச்சா சனி ஞாயிறு கல்லூரிக்கு வரலாம் இல்லை என்னால வரமுடியாது நான் அரியர் வைச்சா கூட பரவாயில்லைன்னு நினைச்சா வராதீங்க திங்கள் முதல் வெள்ளி வரை எல்லா மாணவர்கள் கண்டிப்பா காலேஜ்க்கு வரனும், சனி ஞாயிறு உங்கள் விருப்பம் பாஸாகனும்னு எண்ணம் இருந்தா வாங்க, அரியர் வைக்கனும் டிசி வாங்கிட்டு போகனும்னு எண்ணம் இருந்தா வராதீங்க, எனக்கு ஒண்ணும் கவலையில்லை, நீங்க பாஸ் ஆனா மேற்கொண்டு இங்க படிக்கலாம், பெயில் ஆனா இங்க மட்டுமில்லை வேற எங்கயும் படிக்க முடியாது சொல்லிட்டேன்” என கண்டிப்பாகச் சொல்ல மாணவர்கள் கப்சிப் ஆனார்கள். மிகவும் குழம்பியிருந்தார்கள்
அவர்களின் அமைதியே அவளுக்கான வெற்றியாக மாறியது. அதில் அவளோ
”சரி சரி வந்தது வந்துட்டீங்க அப்படியே நான் சொல்றதை திருப்பிச் சொல்லுங்க” என சொல்ல அவர்களோ முறைக்க அவள் விடவில்லை
”சொல்லித்தான் ஆகனும் முறைச்சாலாம் நான் பயந்துடமாட்டேன் இவ்ளோ நேரம் வகுப்பை கெடுத்துட்டு இங்க நீங்க வந்ததே தப்பு இதுக்காக நான் உங்க மேல பைன் போடலாம் ஆனா பாவம்னு விடறேன்” என சொல்ல மாணவர்கள் அதிர்ந்து ஒழுங்காக நின்றார்கள்.
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
தனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
சினம்தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம்
வனம்தேடும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே