அவ்ளோதான் இது என்ன பள்ளிக்கூடமா காலேஜ்தானே பார்த்துக்கலாம்” என சொல்ல அவனுக்கு மாதவி சொன்னது சரியென பட்டது
”ஆமாம் நீ சொல்றதும் சரிதான் மாதவி, இப்பதான் எனக்கு என்னோட தப்பு விளங்குது நான் மட்டும் இந்த திட்டத்தை செயல்படுத்தியிருந்தா ஒரு தப்பான முன்உதாரணமா நான் இருந்திருப்பேன், எப்படி நான் சுயநலமா யோசிச்சேன் சே” என வருந்த அவளோ
”சே சே உங்களை நீங்களே ஏன் குறை சொல்லிக்கிறீங்க நடக்கற விசயத்தை சமாளிக்க இப்படியொரு திட்டம் யோசிச்சீங்க, அதை செயல்படுத்தலைல்ல அப்புறம் என்ன, விடுங்க ப்ளீஸ்” என அவள் கெஞ்ச அதில் அவனும் தனது முழு கோபத்தையும் குறைத்துவிட்டு அவளை ஏற இறங்கப் பார்த்தான்.
மாடர்ன் உடையில் இருந்தாள்
”உனக்கு இந்த காஸ்ட்யூம் பொருத்தமா இருக்கு மாதவி” என அவன் சொல்ல அவள் திடுக்கிட்டாள்
”என்னது நம்மளை கவனிக்கறாரு சரியில்லையே முதல்ல எஸ்கேப் ஆகனும்” என நினைத்தவள்
”யூ டூ சார் நான் போய் என் வேலையை பார்க்கிறேன்” என சொல்லிவிட்டு அவள் அவசரகதியில் வெளியேறி சென்றுவிட அவனோ தனக்குதானே பெருமிதம் கொண்டான்
”மாதவி கூட என்னை கவனிக்கறாளே என் காஸ்ட்யூம் நல்லாயிருக்குன்னு சொல்றா நைஸ்” என மகிழ்வுடன் வேலையை தொடர்ந்தான்.
மறுபக்கம் மாலை நேரத்தில் கண்ணகி கல்லூரியை ரவுண்ட்ஸ் பார்க்கச் சென்றாள், ஒவ்வொரு வகுப்பும் எப்படியுள்ளது மாணவர்கள் என்ன செய்கிறார்கள், ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் என பார்த்தபடி வந்தாள், அவளைப் பார்த்த அனைவருக்கும் வெறுப்பும் கோபமும்தான் தோன்றியது, அதைபற்றி அவள் கவலைக்கொள்ளாமல் சென்றாள்.