”பரவாயில்லை நண்பா ஓரளவுக்கு வந்துட்ட என்ன உங்கம்மா கைமணம் வரலை அதுவும் கொஞ்ச நாள்ல வந்துடும்” என கணக்குப்பிள்ளை சொல்ல கொம்பனோ
”சத்தமா பேசி வைக்காதடா அவள் காதுல விழப்போகுது, சீக்கிரமா சாப்பிடு போய் தூங்கலாம் காலையில ஏகத்துக்கும் வேலையிருக்கு”
”ஆமா காலையிலயும் உங்கம்மா வரேன்னு சொன்னாங்கள்ல”
”சொன்னாங்க சொன்னாங்க”
”டேய் உன் பொண்டாட்டிக்கிட்ட மாட்டிக்க போறாங்கடா”
”மாட்டிக்காம பார்த்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு, எனக்கு சோர்வா இருக்கு நான் போய் தூங்கறேன்” என சொல்லவிட்டு கொம்பன் உறங்கச் சென்றான்.
மறுநாளில் இருந்து கொம்பனுக்கு அவனது தாயே சமையல் கற்றுக் கொடுக்க கற்றுக் கொடுக்க அவனும் சிரத்தையுடன் செய்யலானான். காவேரிக்கு இவ்விசயம் தெரியக்கூடாதென கணக்குப்பிள்ளையும் சண்முகமும் படாத பாடுபட்டார்கள். எப்போதெல்லாம் கொம்பனின் தாய்
அந்த வீட்டில் இருப்பாரோ அப்போதுதான் காவேரிக்கு கொம்பனை பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்று தோன்றும், அப்போதெல்லாம் அவள் கொம்பனை தேட அவளிடம் இருந்து கொம்பனையும் அவனது தாயையும் காப்பாற்ற அப்படி பாடுபட்டார்கள் கணக்குபிள்ளையும் சண்முகமும்
அவளுக்கு ஆரம்பத்தில் பெரிதாக சந்தேகம் வரவில்லை, நாட்கள் செல்ல செல்ல கொம்பன் சமைத்த உணவு ருசியில் அபாரமாக இருக்கவும் சந்தேகம் கொண்டாள், காரணம் சண்முகத்திற்கு தெரியாத உணவுகளை எல்லாம் கொம்பன் சமைத்து வைத்திருந்தான்
”நம்ம அப்பாவுக்கு தெரியாத சமையல் எப்படி இவன் கத்துக்கிட்டு செய்றான்,