”சரி சரி நான் வேணா அவளுக்குத் தெரியாம வந்து உனக்கு சமையல் கத்துக்கொடுக்கிறேன் போதுமா”
”அடபோம்மா எனக்கு முன்னாடியே சமையல் கத்துக்கொடுத்திருக்கலாம்ல பாரு இவள் வாயில எல்லாம் விழுந்து எழ வேண்டியிருக்கு“
”என்னடா ராசா இப்படி சொன்னா எப்படி, நீ என்னவோ சந்நியாசி ஆகப்போறேன்னு சொன்ன அதான் நான் எதுவும் சொல்லிக் கொடுக்கலை, இப்படி ஒரு வாழ்க்கை உனக்கு அமையும்னு முன்னாடியே எனக்குத் தெரிஞ்சிருந்தா கண்டிப்பா உனக்கு எல்லா வேலைகளையும் கத்துக்கொடுத்திருப்பேன்டா”
”அடபோம்மா வாழ்க்கையே சலிப்பா இருக்கு சமையல் செய்றது எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா வீட்டு வேலைகள் கூட இப்போ சுலபமாயிடுச்சி”
”சமையல் ஒண்ணும் பெரிய கஷ்டம் இல்லை கத்துக்கிட்டா சுலபம்தான் நான் எதுக்கு இருக்கேன் நான் உனக்கு சொல்லித்தரேன்” என சொல்ல அவனோ
”சரிம்மா ரொம்ப பசிக்குது அந்த கேரியரை கொடு நாங்க சாப்பிடறோம் அப்புறம் ராத்திரி எத்தனை மணிக்கு வீட்டுக்கு வர்ற”
”எத்தனை மணிக்கு வர்றதுன்னு சொல்லு”
”ஒரு 7 மணிக்கா வாம்மா இதப்பாரு முன்வாசல் வழியா வராத உனக்காக பின்வாசல் திறந்து வைக்கிறேன் அதுவழியா வாம்மா”
”சரிடா சரிடா”
”அப்பா எப்படியிருக்கார்மா”
”அவரும் உன் நினைப்பிலதான் இருக்காரு பாவம்டா அந்த மனுஷன் ஒத்த புள்ளையை