”அம்மா இங்க என்னம்மா செய்ற, நீ வந்ததை அந்த ராட்சஸி பார்த்தா அவ்ளோதான் ருத்ரதாண்டவம் ஆடுவா இங்கிருந்து கிளம்பும்மா”
”இருடா உன்னைப் பார்த்து எத்தனை நாளாச்சி ஆசையா பார்த்து பேசலாம்னு வந்தா இப்படி விரட்டற ஆமா எதுக்குடா அவள் இப்படி திட்டிட்டுப்போறா“
”நீதான் கேரியர் மாத்தி வைச்ச விசயம் கண்டுபிடிச்சிட்டா, அதான் திட்டிட்டுப் போறா உனக்கெதுக்கும்மா இந்த வேண்டாத வேலை, என் சமையல் சாப்பிட்டு அவள் கஷ்டப்படட்டுமே எதுக்கு அவளை காப்பாத்தற”
”அவளை நான் காப்பாத்தலை எங்க அவள் உன்னை திட்டுவாளோன்னு பயந்துதான் அப்படி செய்தேன், உண்மையில நீ செய்த சமையல் வாய்ல வைக்க முடியலை கொம்பா”
”ஆமாம்மா என்னாலயே சாப்பிட முடியலை, அட நாய் கூட சாப்பிட மாட்டேன்னு குரைக்குதும்மா”
”சரி விடு, இந்தா கேரியர் கொண்டு வந்திருக்கேன் எல்லாருக்கும் இதுல சாப்பாடு இருக்கு முதல்ல எல்லாரும் சாப்பிடுங்க”
”ப்ச் இது அவளுக்கு தெரிஞ்சா பெரிய வம்பாயிடும்மா”
“தெரியாம பார்த்துக்கடா”
”ராத்திரி என்ன செய்றதாம்”
”இதே போல நான் கேரியர் கொண்டு வரேன் அதையே எல்லாரும் சாப்பிடுங்க அவளுக்கு தெரியாம பார்த்துக்க“
”அம்மா அவள் நம்ப மாட்டாள்ம்மா, நானேதான் சமைக்கனும்னு சொல்லிட்டா”