(Reading time: 27 - 54 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

அங்கோ கொம்பன் செய்த சாப்பாட்டை சாப்பிட பிடிக்காமல் கணக்குபிள்ளை புலம்ப கொம்பனும் நிம்மதியின்றி தவிக்க சண்முகமோ நான் சமைக்கிறேன் என சொல்ல அவனோ வேண்டாம் என சொல்ல அதைக்கேட்ட காவேரிக்கு குழப்பமாக இருந்தது

  

”என்னது கொம்பன் செய்த சாப்பாடு எனக்கு பிடிச்சிருக்கு ஆனா இவங்களுக்கு பிடிக்கலையா அதெப்படி” என நினைத்தபடியே வந்தாள்.

  

அவள் வரவும் அதிர்ந்தான் கொம்பன் கணக்குபிள்ளையோ

  

”நண்பா உன்னை திட்டத்தான் வர்றா நீயே வாங்கிக்க நான் அப்படி போறேன்” என சொல்ல கொம்பனோ அடக்கினான்

  

”டேய் இருடா உன்னடா உயிர் நண்பனை இப்படி அம்போன்னு விட்டுட்டுப் போறியே இது அநியாயம்டா”

  

”சரி சரி இருக்கேன்” என சொல்ல அவளோ எதுவும் பேசாமல் கொண்டு வந்த கேரியரை வைத்துவிட்டு அவர்கள் என்ன சமைத்திருக்கிறார்கள் என பார்த்து அதிர்ந்தாள்

  

அவளது கேரியரில் இருந்த உணவே வேறு அவளுக்கு குழப்பம் அதிகமாகி எதுவும் பேசாமல் தன் அறைக்குச் சென்றாள். அவளின் அமைதியைக்கண்ட கொம்பன் நிம்மதியாக கணக்குப்பிள்ளையோ

  

”நண்பா என்னாச்சி இவளுக்கு அமைதியா இருக்கா இந்நேரம் ஆஆஊஊன்னு கத்தி ஆர்ப்பாட்டம் செய்வாள்ன்னு நினைச்சேனே”

  

”நானும்தான் நினைச்சேன் அவளோட அமைதியைப் பார்த்தா சந்தேகமா இருக்கு”

  

”ஒருவேளை நீ செய்த சாப்பாட்டை சாப்பிட்டு நொந்துப் போய் வந்துட்டா போல இருக்கு பரவாயில்லை நண்பா அவளை பழிவாங்கவும் உன்கிட்ட ஒரு வழி கிடைச்சிருக்கு போல”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.