”கூப்பிட்டா காதுல விழாத உனக்கு”
”செய்ற வேலையை பாதியிலயே விட்டுட்டு வர்ற பழக்கம் எனக்கு இல்லை அதான் முடிச்சிட்டு வந்தேன்“
”நல்லா வக்கனையா பேசு என் அப்பாவை எதுக்காக வேலை வாங்கற”
”நானா“
”ஆமா நீதானே சமையல் செய்யனும் எதுக்காக என் அப்பாவை சமைக்க சொன்ன”
”எனக்கு சமையல் தெரியாது அதனால அவர் சமைக்கறேன்னாரு சரின்னு சொன்னேன் இதுல என்ன தப்பு”
”சமையல் கூட தெரியாதா, என்னத்த உங்கம்மா உன்னை வளர்த்தாங்களோ”
”உனக்கே சமையல் தெரியலை நீ என்னை பத்தி குறை சொல்றியா“
”இதப்பாரு சமையல் எல்லாம் பெரிய விசயமே இல்லை, சுலபமா கத்துக்கலாம் நான் புகுந்த வீட்டுக்கு போற அன்னிக்கு சமையல் கத்துக்கிறேன், அதுக்கு முன்னாடி நீ போய் சமையல் செய், எங்கப்பா ஓய்வெடுக்கனும்”
”எனக்கு சமையல் தெரியாது”
”தெரியாதுன்னா எங்கப்பாகிட்ட கத்துக்கிட்டு செய் அவரை வேலை வாங்காத அவரை பக்கத்துல துணையா வைச்சிக்கிட்டு நீ சமைச்சி போடு, ஏன் உன்னால முடியாதா”
”ஷ்ஷ்ஷ் யப்பா முடியலை” என புலம்ப அதற்குள் சண்முகம் வந்தார்
”காவேரி நான் சமைச்சிட்டேன் எதுக்கு மாப்பிள்ளையை கஷ்டப்படுத்தற வா வா சாப்பிடுவ”