என சொல்ல அவளோ கொம்பனைப் பார்த்து
”இனிமேல நீங்கதான் சமைக்கனும் சமையல் தெரியலையா அப்பாகிட்ட கத்துக்குங்க இல்லைன்னா உங்கம்மாவை கூட்டிட்டு வந்து சமைக்க வைங்க புரியுதா”
”நான் ஒருத்தன் வேலைக்காரனா இருக்கறது போதாது, எங்கம்மா கூட வேலைக்காரியாகனுமா, அவங்களுக்கு என்ன தலையெழுத்து ஒண்ணும் வேணாம்” என சொல்ல அவளோ மென்மையாக சிரித்து
”அப்ப நீயே சமையல் செய்”
“செய்றேன்”
”ஒத்துக்கிட்ட கண்டிப்பா செய்யனும், என்னை ஏமாத்தனும்னு நினைச்ச இதை விட பெரிய கஷ்டத்தை உனக்கு நான் கொடுத்துடுவேன்” என மிரட்டிவிட்டு சாப்பிடச் செல்ல கொம்பனோ சோமாகிப் போனான். கணக்குபிள்ளையோ
”சரி சரி விடு எல்லா வீட்லயும் இதுபோல நடக்குமா என்னவோ இந்த வீட்ல நடக்குது, காவேரியை தப்பு சொல்ல முடியாது அவள் வெளி வேலைகளை பார்த்துக்கறா, அது எவ்ளோ கஷ்டம்னு உனக்கு நல்லாவே தெரியும், வீட்டு வேலைகள்தானே முதல்ல கஷ்டமாயிருக்கும் போக போக சரியாயிடும்” என சொல்ல அவனோ
”வாழ்க்கையில ஒரு கசப்பு தெரியுது நண்பா”
”கசப்பும் உடம்புக்கு நல்லதுதான் நண்பா” என சொல்ல கொம்பனும் ஆம் என தலையாட்டினான்.
சிறிது நேரத்தில் காவேரி சாப்பிட்டு முடித்து வேலைக்குச் செல்ல கிளம்பி கொம்பனிடம் வந்தவள்