”நீங்க வேணா மத்த வேலைகளை செய்ங்க மாப்பிள்ளை, நான் சமையல் வேலைகளை செய்றேன்” என சொல்ல கொம்பன் நிம்மதியானான்
”ரொம்ப நன்றி மாமா என் வயித்துல பாலை வார்த்தீங்க, நான் மத்த வேலைகளை முடிக்கறேன் நீங்க சமையல் செய்ங்க” என சொல்ல அவரும் சமையல் செய்ய செல்ல கொம்பனும் கணக்குப்பிள்ளையும் வீட்டு வேலைகளை சரிபாதியாக பிரித்துக் கொண்டு மடமடவென செய்யலானார்கள்.
குளித்து முடித்து ரெடியாகி வந்த காவேரியோ தன் தந்தை சமைப்பதைக்கண்டு கோபம் கொண்டாள்
”அப்பா நீங்க எதுக்கு சமைக்கனும் வாங்க இப்படி, உங்களுக்கே உடம்பு சரியில்லை இப்ப போய் இங்க நின்னுக்கிட்டு வாங்கப்பா” என அழைக்க அவரோ
”அட இருக்கட்டும்மா மாப்பிள்ளைக்கு சமையல் செய்யத் தெரியலை அதான் நானே சமைக்கலாம்னு வந்துட்டேன் உனக்கு நேரமாச்சில்ல இதோ 5 நிமிஷம் ஆயிடுச்சி சாப்பிட்டு கிளம்பும்மா” என சொல்ல அவளோ
”கொம்பா கொம்பா” என உரக்க அழைக்க அவளின் அழைப்புக் கேட்டும் அவன் வராமல் போக அவள் விடாமல் அழைக்க கணக்குப்பிள்ளையே கொம்பனை பிடித்து இழுத்தான்
”நண்பா அவள் காட்டுக்கத்தல் கத்தறாளே உன் காதுல விழலையா வாப்பா என்ன ஏதுன்னு கேட்கலாம்”
”டேய் போடா அவள்கிட்ட போனா திட்டு வாங்கனும் நான் வரலை”
”இல்லைன்னாலும் அவள் தேடி வந்து திட்டுவா அதுக்கு அவளை தேடிப்போய் வாங்கிக்கலாம் வாப்பா” என அழைத்துக் கொண்டு செல்ல பாதியில் காவேரியே வந்தாள்