”இந்தா சாப்பிடு” என்றான் அவளோ
”யார் சமைச்சது”
“நான்தான்“
“பொய் சொல்லாத”
”ஏய் நான்தான் சாப்பிடு இந்தா” என சொல்ல அவளோ வேறு பக்கம் காட்டி
”அங்க வைச்சிட்டு போ நான் சாப்பிட்டுக்கறேன்”
”சந்தோஷம்” என சொல்லிவிட்டு அவன் அவள் சொன்ன இடத்தில் கேரியரை வைத்துவிட்டு பைக் ஏறி வீடு சென்றான். அவன் சென்றதும் காவேரியோ இருக்கும் வேலைகளை விரைவாக முடிக்க எண்ணி வேலையாட்களை வேலை வாங்கிக் கொண்டிருக்க
கொம்பன் வைத்துச் சென்ற கேரியரை யாருக்கும் தெரியாமல் நைஸாக களவாடினார் கொம்பனின் தாய். அந்த கேரியரை கொண்டுச் சென்று ஓரிடமாக வைத்து ஒவ்வொன்றாக திறந்து பார்த்த ருசி பார்த்தார், வாயில் வைக்க முடியாத அளவு கேவலமாக இருந்தது, இதை மருமகள் சாப்பிட்டு தன் மகனிடம் கோபம் கொள்வாளே என நினைத்தவர் உடனே அந்த கேரியரில் இருந்த சாப்பாட்டை கொட்டிவிட்டு தான் கொண்டு வந்திருந்த சாப்பாட்டை அதில் அடுக்கி எந்த இடத்தில் இருந்து கேரியரை எடுத்தாரோ அதே இடத்தில் வைத்துவிட்டு சென்றார்.
வழியில் எதிர்பட்ட தன் கணவரிடம் தயக்கத்துடன் நிற்க அவரோ
”சாப்பாட்டை மாத்திட்டல்ல”
”உங்களுக்கு எப்படிங்க தெரியும்” என்றார் ஆச்சர்யமாக