என சொல்ல சண்முகமோ காவேரியின் கேரியரை திறந்துப் பார்த்து வியந்தார்
”மாப்பிள்ளை நாம வைச்ச சாப்பாடு மாறிப்போச்சே இது எப்படி” என கேட்க அவனும் என்னவென பார்த்தான்.
காவேரி சாப்பிட்டாலும் 2 ஆள் அளவுக்கு சாப்பாடு வைத்திருந்தபடியால் கால்வாசி சாப்பிடாமல் கொண்டு வந்திருந்தாள். அந்த உணவைக்கண்டு இவர்கள் குழம்பினார்கள் அதில் கணக்குபிள்ளை அந்த சாப்பாட்டைக்கண்டு உடனே கண்டுபிடித்தான்
”நண்பா இது உங்கம்மாவோட வேலை”
“என்னடா சொல்ற”
”ஆமாம்டா வாசனை பார்த்தா தெரியலை, உங்கம்மா கையால எத்தனை முறை சாப்பிட்டிருக்கேன் அடிச்சி சொல்றேன், இது உங்கம்மாவோட சமையல்தான் உன்னைக்காப்பாத்த சாப்பாட்டை மாத்தி வைச்சிருக்காங்க, எது எப்படியோ காவேரியாவது நல்ல சாப்பாட்டை சாப்பிட்டாளே எனக்கு அதுவும் வாய்க்கலை, இந்த கேவலமான சாப்பாட்டை இனிமேல சாப்பிட முடியாது இரு நாய்க்கு போடறேன்” என சொல்லிக் கொண்டே கொம்பன் செய்த உணவை எடுத்துக் கொண்டு நாயிடம் சென்று போட்டான்
அதுவோ ஒரு வாய் சாப்பிட்டு அது பிடிக்காமல் கோபத்தில் குரைக்கத் தொடங்கியது. கணக்குபிள்ளையோ அந்த நாயை சமாதானம் செய்ய முயல அந்த சத்தம் கேட்டு அனைவருமே வந்து பார்த்தார்கள்.
சாப்பாடு வீணாக இருப்பதைக்கண்டு காவேரி கோபம் கொண்டாள்
”கொம்பா என்ன இது சாப்பாட்டை இப்படி வீணாக்கியிருக்கீங்க, நீங்க செய்த சாப்பாட்டு உங்க நாய்கூட சாப்பிட மாட்டேங்குது, இதுதான் நீங்க சமைக்கற லட்சணமா”
”நான் என்ன சமையல்காரனா அட்டகாசமா சமைக்கறதுக்கு, உன் அப்பா சொல்ல சொல்ல