”தெரியாதே”
“முதல்ல அதை போய் கண்டுபிடி”
”அடபோடா வாழ்க்கையே வெறுத்துப் போச்சி”
“இதுக்கேவா போப்பா போ உன் பொண்டாட்டி வேலைக்கு போகனும்ல”
”ம்க்கும் இது ஒண்ணுதான் குறைச்சல்” என முனக சண்முகமோ
”மாப்பிள்ளை” என அழைக்க கொம்பனோ
”நீங்களுமா என்ன வேணும் சொல்லுங்க” என எரிந்துவிழ
”மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை”
”உங்களுக்கு வேற எதுவும் சொல்லத் தெரியாதா மாமா எப்ப பாரு இதையே சொல்லிக்கிட்டு“
”என்ன செய்றது மாப்பிள்ளை என் பொண்ணு நடந்துக்கறதுக்கு என்னால மன்னிப்புதான் கேட்க முடியும்”
”இப்ப மன்னிப்பா முக்கியம் இருக்கற பிரச்சனையை முடிக்க வழி தெரியலையே”
“எனக்கு சமையல் தெரியும், காவேரியோட அம்மா இறக்கறதுக்கு முன்னாடி கொஞ்ச நாளுக்கு நான் சமையல் செய்து போட்டேன், வேலைக்காரங்க சமையல் அவளுக்கு பிடிக்காது சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டா, அப்ப நான்தான் சமையல் செய்தேன்”
”அப்படியா“