”இதுக்கும் மேல வேணுமா, சூப்பர் அதுக்கென்ன வேலைகளை கொடுத்துட்டாப் போச்சி, சீக்கிரமா வீட்டு வேலைகளை முடிச்சிட்டு சாப்பாடு செஞ்சி வைங்க, நான் குளிச்சிட்டு வந்து சாப்பிட்டு நேரத்தோட தோப்பு வேலைகளுக்குப் போகனும், ஆகட்டும் ஆகட்டும் ” என கட்டளையிட்டுவிட்டு அவள் சென்றுவிட கொம்பனுக்கு ஆயாசமாக இருந்தது
கணக்குப்பிள்ளையோ அப்போதே தயாராகிவிட்டான்.
”சரி சரி வா கொம்பா வருத்தப்படறதால எதுவும் நடக்காது நீ அவளை ஏமாத்த நினைச்ச அவள் உன்னை வைச்சி செய்றா, வீட்டு வேலைகள் அம்புட்டு இருக்கு தனியாளா செய்தா வேலைக்காகாது, நீ போய் சமையல் செய் நான் வேணா மத்த வேலைகளை செய்றேன்”
”சமையலா நானா”
“ஏன் உனக்குத் தெரியாதா”
”எனக்கென்னடா தெரியும்”
”எனக்கும் தெரியாதே இப்ப என்ன செய்றது”
”அவளுக்கெல்லாம் நான் சமையல் செய்து போடனுமா”
”அவளுக்குன்னு ஏன் நினைக்கற நாம சாப்பிடறதுக்காகவாவது சாப்பாடு வேணும்ல எதையாவது சமைச்சி வை கொம்பா”
”எனக்கு எதுவும் தெரியாதே என் வீட்லயே நான் சமையல்கட்டு பக்கம் போனதில்லை அட அது எங்க இருக்குன்னு கூட தெரியாதே”
”உன் வீட்ல சமையல்கட்டு எங்க இருக்குன்னு தெரியாம போனது ஆச்சர்யம் இல்லை இந்த வீட்ல எங்க சமையல்கட்டு இருக்குன்னு தெரியுமா”